ஹாட்ரிக் அடிக்கும் முயற்சியில் தல அஜித்-சிறுத்தை சிவா

  • IndiaGlitz, [Monday,June 26 2017]

எம்.ஜி.ஆருக்கு ஒரு ப.நீலகண்டன், சிவாஜிக்கு ஒரு பீம்சிங், கமல்ஹாசனுக்கு ஒரு கே.பாலசந்தர், ரஜினிக்கு ஒரு எஸ்பி முத்துராமன் போல் ஒவ்வொரு நடிகருக்கும் ஒரு குறிப்பிட்ட இயக்குனருடன் கெமிஸ்ட்ரி ஒர்க் அவுட் ஆகிவிடுவதுண்டு. இந்த குறிப்பிட்ட கூட்டணி இணைந்தால் அந்த படம் வெற்றிப்படம் என்று ரிலீஸ் ஆகும் முன்பே கூறிவிடுவதும் வழக்கம்.

இந்த வகையில் விஜய், அஜித்துக்கு வெற்றிப்படங்கள் கொடுக்கும் இயக்குனர்கள் குறித்து பார்த்தால் விஜய்க்கு ஏ.ஆர்.முருகதாஸ் அவர்களையும், அஜித்துக்கு சிறுத்தை சிவா அவர்களையும் கூறலாம்.

இந்நிலையில் 'மெர்சல்' படத்தை அடுத்து விஜய்யின் அடுத்த படத்தை ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கவுள்ளதாக செய்திகள் வெளிவந்து கொண்டிருக்கும் நிலையில் அஜித்தின் அடுத்த படத்தையும் சிறுத்தை சிவா இயக்கவுள்ளதாக கூறப்படுகிறது.

ஆம், 'விவேகம்' படத்தை அடுத்து மீண்டும் சிறுத்தை சிவா இயக்கத்திலேயே அஜித் நடிக்கவுள்ளதாகவும், இந்த படத்தை அஜித்தின் ஆஸ்தான் தயாரிப்பாளர் ஏ.எம்.ரத்னம் தயாரிக்கவுள்ளதாகவும் கூறப்படுகிறது. இந்த தகவல் உண்மையாகும் பட்சத்தில் 'வேதாளம்', 'விவேகம்' படத்தை அடுத்து அஜித்-சிவா கூட்டணி ஹாட்ரிக் அடிக்கவுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

More News

வரும் டிசம்பரில் ஜெய்-அஞ்சலி திருமணம்?

அஜித்-ஷாலினி, சூர்யா-ஜோதிகா, பிரசன்னா-சினேகா நட்சத்திர ஜோடிகளை அடுத்து ஜெய்-அஞ்சலி ஜோடி காதலித்து வருவதாகவும், விரைவில் இவர்களது திருமணம் நடைபெறும் என்று கூறப்படுகிறது.

கமல், ரஜினி பாணியில் களமிறங்கும் விஜய்மில்டன்

ஒரு திரைப்படத்தின் உண்மையான வெற்றி என்பது குறைந்த பட்ஜெட்டில் தயாரிக்கப்பட்டு அதிக வசூல் செய்வதே என்று திரையுலகினர் கூறுவதுண்டு.

'மாநகரம்' இயக்குனரின் அடுத்த படத்தில் பிரபல நடிகர்

இந்த ஆண்டு வெளிவந்த வெற்றிப்படங்களில் ஒன்று 'மாநகரம்' என்பது அனைவரும் அறிந்ததே.

ஜெயம் ரவியின் 'வனமகன்' ஓப்பனிங் வசூல் விபரங்கள்

இயக்குனர் விஜய் இயக்கத்தில் ஜெயம் ரவி, சாயிஷா, நடிப்பில் கடந்த வெள்ளியன்று வெளியான 'வனமகன்' படத்திற்கு ரசிகர்களிடையே நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது...

சிம்புவின் 'AAA' படத்தின் ஓப்பனிங் வசூல் எப்படி?

சிம்பு, தமன்னா, ஸ்ரேயா நடிப்பில் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கிய 'அன்பானவன் அசராதவன் அடங்காதவன்' திரைப்படம் பெரும் எதிர்ப்பார்ப்புடனும், கடைசி நேர டென்ஷன்களையும் மீறி கடந்த வெள்ளியன்று வெளியானது...