close
Choose your channels

'மாநகரம்' இயக்குனரின் அடுத்த படத்தில் பிரபல நடிகர்

Monday, June 26, 2017 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

இந்த ஆண்டு வெளிவந்த வெற்றிப்படங்களில் ஒன்று 'மாநகரம்' என்பது அனைவரும் அறிந்ததே. பெரிய ஸ்டார் இல்லாமல் அழுத்தமான, விறுவிறுப்பான திரைக்கதையால் வெற்றி பெற்ற இந்த படத்தை லோகேஷ் கனகராஜ் இயக்கியிருந்தார்.

'மாநகரம்' என்ற வெற்றி படத்தை இயக்கிய லோகேஷ் கனகராஜூக்கு தற்போது பெரிய நடிகர் ஒருவரின் படத்தை இயக்கும் வாய்ப்பு கிடைத்துள்ளது. ஆம், அவருடைய இயக்கத்தில் உருவாகும் அடுத்த படத்தில் கார்த்தி நடிக்கவுள்ளார்.

கார்த்தி தற்போது 'தீரன் அத்தியாயம் ஒன்று' படத்தில் நடித்து வருகிறார். இதனையடுத்து அவர் பிரபுதேவா இயக்கத்தில் 'கருப்பு ராஜா வெள்ளை ராஜா' படத்தில் நடிக்கவுள்ளார். இந்த இரு படங்களை அடுத்து கார்த்தி, லோகேஷ் இயக்கும் புதிய படத்தின் படப்பிடிப்பில் கலந்து கொள்வார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.