close
Choose your channels

'வலிமை' படப்பிடிப்பின்போது அஜித்துக்கு விபத்தா?

Friday, November 20, 2020 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

தல அஜித் நடித்துவரும் ‘வலிமை’ படத்தின் படப்பிடிப்பு கடந்த சில நாட்களாக ஐதராபாத்தில் உள்ள ராமோஜிராவ் பிலிம் சிட்டியில் நடைபெற்றது என்பதும் கடந்த இரண்டு நாட்களுக்கு முன்னர் தான் அந்த படப்பிடிப்பு முடிவடைந்து அஜித் உள்பட படக்குழுவினர் சென்னை திரும்பினார்கள் என்பதையும் பார்த்தோம்

இந்த நிலையில் ஐதராபாத்தில் நடந்த படப்பிடிப்பின்போது அஜித்துக்கு லேசான காயம் ஏற்பட்டதாகவும் இதனை அடுத்து அவர் காயத்துக்கு சிகிச்சை எடுத்துக் கொண்டு மீண்டும் படப்பிடிப்பில் கலந்து கொண்டு படக்குழுவினர்களுக்கு முழு ஒத்துழைப்பு அளித்ததாகவும் தகவல்கள் வெளிவந்துள்ளது

இருப்பினும் அஜித்துக்கு ஏற்பட்ட காயம் சிறிய அளவுக்தான் என்றும் இந்த சிறு விபத்து நடந்து பத்து நாட்களுக்கு மேல் ஆகி விட்டதாகவும் அஜித் தற்போது நலமுடன் இருப்பதாக படக்குழுவினர் தெரிவித்துள்ளனர்

‘வலிமை’ படப்பிடிப்பின்போது அஜித்துக்கு விபத்து ஏற்பட்டு காயம் ஏற்பட்ட தகவல் 10 நாட்களுக்கு பின்னர் வெளிவந்திருப்பது அஜித் ரசிகர்களிடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.   

Comments

Welcome to IndiaGlitz comments! Please keep conversations courteous and relevant to the topic. To ensure productive and respectful discussions, you may see comments from our Community Managers, marked with an "IndiaGlitz Staff" label. For more details, refer to our community guidelines.
settings
Login to post comment
Cancel
Comment