close
Choose your channels

சென்னையில் தல தோனி கலந்து கொள்ளும் சினிமா நிகழ்ச்சி.. மனைவி சாக்சியுடன் வருகிறார்..!

Sunday, July 9, 2023 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

தல தோனி தனது மனைவி சாக்சியுடன் நாளை சென்னை வர இருப்பதாக வெளியாகி உள்ள தகவல் ரசிகர்களுக்கு மகிழ்ச்சி அளித்துள்ளது.

தல தோனி சமீபத்தில் தோனி எண்டர்டெயின்மென்ட் நிறுவனம் என்ற திரைப்பட தயாரிப்பு நிறுவனத்தை தொடங்கினார் என்பதும் இந்த நிறுவனத்தின் மூலம் ‘எல்ஜிஎம்’ என்ற தமிழ் படத்தை தயாரித்து வருகிறார் என்பதும் தெரிந்ததே.

ரமேஷ் தமிழ்மணி இயக்கத்தில் உருவாகி இருக்கும் இந்த படத்தில் ஹரிஷ் கல்யாண், இவானா, நதியா, யோகி பாபு உட்பட பல பல நடித்துள்ளனர். இந்த படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து தற்போது தொழில்நுட்ப பணிகள் நடைபெற்று வருகிறது. மேலும் இந்த படத்தின் டீசர் கடந்த ஜூன் மாதம் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது.

இந்த நிலையில் ‘எல்ஜிஎம்’ படத்தின் ஆடியோ மற்றும் டிரைலர் விழா நாளை சென்னையில் உள்ள தனியார் இன்ஜினியரிங் காலேஜில் நடைபெற இருப்பதை அடுத்து இந்த விழாவில் கலந்து கொள்வதற்காக தோனி மற்றும் அவரது மனைவி சாக்சி வர இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த தகவலை தோனி என்டர்டெயின்மென்ட் நிறுவனத்தின் சமூக வலைதள பக்கத்தில் பதிவு செய்யப்பட்டுள்ள நிலையில் தோனியை காண ரசிகர்கள் மிகவும் ஆவலுடன் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.