close
Choose your channels

தல தோனியின் 'எல்ஜிஎம்' சென்சார் மற்றும் ரன்னிங் டைம் தகவல்கள்..!

Wednesday, July 26, 2023 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

தல தோனி மற்றும் அவரது மனைவி சாக்ஸி தோனி தொடங்கிய தோனி எண்டர்டெயின்மென்ட் என்ற தயாரிப்பு நிறுவனத்தின் முதல் தயாரிப்பான ‘எல்ஜிஎம்’ என்ற படம் நாளை மறுநாள் திரையரங்குகளில் தமிழ், தெலுங்கு மொழிகளில் ரிலீஸ் ஆக உள்ளது.

இந்த படத்தின் பாடல்கள் மற்றும் ட்ரெய்லர் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்ற நிலையில் இந்த படத்திற்கு மிகப்பெரிய எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது. மேலும் சென்னை ஹைதராபாத் என பிரம்மாண்டமான புரமோஷன் நிகழ்ச்சிகளும் நடத்தப்பட்டது.

இந்த நிலையில் இந்த படத்தின் சென்சார் மற்றும் ரன்னிங் டைம் தகவல்கள் தற்போது வெளியாகியுள்ளன. இந்த படத்திற்கு சென்சார் அதிகாரிகள் ’யூ’ சான்றிதழ் கொடுத்துள்ளனர்.

அதேபோல் இந்த படத்தின் ரன்னிங் டைம் 153 நிமிடங்கள் அதாவது 2 மணி நேர 33 நிமிடங்கள் என்றும் தகவல் வெளியாகி உள்ளன. சென்சார் சான்றிதழ் கிடைத்துள்ளதை அடுத்து இந்த படம் நாளை மறுநாள் ரிலீஸ் ஆக உள்ளது உறுதி செய்யப்பட்டுள்ளது.

ஹரிஷ் கல்யாண், இவானா, நதியா, யோகி பாபு உட்பட பலர் நடித்துள்ள இந்த படத்திற்கு விஸ்வஜித் ஒளிப்பதிவு செய்துள்ளார். இந்த படத்தை இயக்கி இசையமைத்துள்ளார் தமிழ்மணி என்பது குறிப்பிடத்தக்கது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.