close
Choose your channels

இன்று ஃபைனல்.. நேற்று செகண்ட் லுக்.. தல தோனிக்கு குவியும் வாழ்த்துக்கள்..!

Sunday, May 28, 2023 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

தல தோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணி இன்று குஜராத் அணியுடன் ஐபிஎல் இறுதிப் போட்டியில் மோத இருக்கும் நிலையில் தல தோனி தயாரிக்கும் ‘எல்.ஜி.எம்’ திரைப்படத்தின் செகண்ட் லுக் போஸ்டர் நேற்று வெளியாகி இணையத்தில் வைரல் ஆகி வருகின்றன. இதனை அடுத்து ரசிகர்கள் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

தல தோனி மற்றும் அவரது மனைவி சாக்‌ஷி தோனி ஆகிய இருவரும் இணைந்து தொடங்கிய தோனி எண்டர்டெயின்மென்ட் நிறுவனத்தின் தயாரிப்பில் உருவாகும் முதல் திரைப்படம் ‘எல்.ஜி.எம்’. தமிழில் உருவாகும் இந்த படத்தை ரமேஷ் தமிழ்மணி என்பவர் இயக்கி வருகிறார் என்பதும் ஹரிஷ் கல்யாண், இவானா, நதியா, யோகி பாபு உட்பட பலர் இந்த படத்தில் நடித்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் இந்த படத்தின் டீசர் விரைவில் வெளியாகும் என இந்த போஸ்டரில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்த படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வந்த நிலையில் சமீபத்தில் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியான நிலையில் நேற்று செகண்ட் லுக் போஸ்டர் வெளியாகி உள்ளது. இந்த போஸ்டர் தற்போது இணையத்தில் வைரலாகி வரும் நிலையில் இந்த படம் வெற்றி பெறவும் இன்று நடைபெற இருக்கும் ஐபிஎல் இறுதிப் போட்டியில் தல தோனியின் சிஎஸ்கே வெற்றி பெறவும் ரசிகர்கள் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.   

Comments

Welcome to IndiaGlitz comments! Please keep conversations courteous and relevant to the topic. To ensure productive and respectful discussions, you may see comments from our Community Managers, marked with an "IndiaGlitz Staff" label. For more details, refer to our community guidelines.
settings
Login to post comment
Cancel
Comment