களை கட்டியது ஐபிஎல் திருவிழா: சென்னை வந்த தல தோனிக்கு விசில் போடும் வீடியோ!

ஒவ்வொரு ஆண்டும் ஐபிஎல் விளையாட்டுப் போட்டிகளின் திருவிழா மிகச் சிறப்பாக நடைபெற்று வரும் நிலையில் இந்த ஆண்டின் ஐபிஎல் போட்டி விரைவில் தொடங்க உள்ளது. இந்த மாத இறுதியில் அல்லது ஏப்ரல் மாதம் ஐபிஎல் போட்டிகள் தொடங்கும் என்றும், விரைவில் ஐபிஎல் போட்டிகள் குறித்த அட்டவணையும் வெளியாக உள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது

இந்த நிலையில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை சேர்ந்த வீரர்கள் தற்போது சென்னைக்கு வருகை தர தொடங்கிவிட்டதால் ரசிகர்கள் விசில் போட்டு அவர்களை வரவேறு வருகின்றனர். நேற்று சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டன் தல தோனி சென்னை வந்ததை அடுத்து அவருக்கு சிஎஸ்கே அணி நிர்வாகிகள் சிறப்பான வரவேற்பு கொடுத்தனர்.

தல தோனியின் சென்னை வருகையை அடுத்து ‘விசில் போடுங்க’ என்ற பாடலுடன் கூடிய ஒரு வீடியோவை சென்னை சூப்பர் கிங்ஸ் ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளது. அதில் தல தோனி சென்னை வந்து இறங்கும் காட்சிகள் உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் தோனியை அடுத்து அம்பத்தி ராயுடுவும் சென்னைக்கு வந்துள்ளார் என்பதும் விரைவில் மற்ற வீரர்களும் சென்னைக்கு வரவுள்ளனர் என்பதால் ஐபிஎல் போட்டி களைகட்ட தொடங்கிவிட்டது

More News

ரம்யா என் மனைவியை விட அழகானவர்: பிக்பாஸ் ரியோராஜ்

பிக்பாஸ் நிகழ்ச்சி சமீபத்தில் முடிவடைந்த நிலையில் இந்த நிகழ்ச்சியில் கலந்துகொண்ட போட்டியாளர்களில் ஒருவர் ரியோ என்பதும் இவருக்கு ஏராளமான ரசிகர்கள் இணையதளத்தில் குவிந்தனர் என்பதும் தெரிந்ததே 

அரசியல் குறித்து சசிகலா எடுத்த அதிரடி முடிவு: விரிவான அறிக்கை

முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் தோழி சசிகலா சமீபத்தில் சிறையில் இருந்து விடுதலையான நிலையில் தமிழக அரசியலில் தீவிரமாக ஈடுபடுவார் என்றும்,

நடிகை ஸ்ரீதேவி மகளின் வேற லெவல் போட்டோ ஷுட்… வைரல்!

தமிழ் சினிமா மட்டுமல்லாது பாலிவுட் சினிமாவிலும் உச்சத்தை பிடித்து மறைந்த நடிகை ஸ்ரீதேவி. இவருடைய மறைவை சினிமா ரசிகர்கள் இன்றும் ஏற்றுக் கொள்ளாமல் இருந்து வரும்

விளையாடாமல் இருந்தாலும் அவரு டாப்புதான்… அசத்தும் இந்தியக் கேப்டன்!

கடந்த ஆண்டு நடைபெற்ற ஆஸ்திரேலியாவிற்கு எதிரான டி20 போட்டியில் இந்திய அணி அபார வெற்றிப்பெற்றது.

4ஆவது டெஸ்ட்டில் ட்ரா செய்துவிட்டால்? ஜோ ரூட்டின் கணிப்பை கேலி செய்யும் நெட்டிசன்கள்!

இங்கிலாந்திற்கு எதிரான டெஸ்ட் கிரிக்கெட் போட்டித் தொடரில் இந்திய அணி  2-1 என்ற நிலையில் முன்னிலைப் பெற்று இருக்கிறது.