'தல 59' பட பூஜை முடிந்துவிட்டதா?

  • IndiaGlitz, [Friday,December 14 2018]

கடந்த சில வருடங்களாக அஜித் நடித்த படம் ஒன்று வெளியாகி ஓரிரு மாதங்களுக்கு பின்னரே அடுத்த படம் குறித்த பேச்சுவார்த்தையே ஆரம்பமாகும். ஆனால் 'விஸ்வாசம்' படத்தில் அஜித் நடித்து கொண்டிருந்தபோதே 'தல 59' படத்தின் பேச்சுவார்த்தை முடிந்து இயக்குனர், தயாரிப்பாளர் குறித்த செய்திகளும் வெளிவந்துவிட்டது என்பது தெரிந்ததே.

மறைந்த நடிகை ஸ்ரீதேவியின் கணவர் போனிகபூர் தயாரிப்பில் எச்.வினோத் இயக்கத்தில் 'தல 59' உருவாகவுள்ளது. இந்த படம் 'பிங்க்' படத்தின் ரீமேக் என்றும் இந்த படத்தில் அமிதாப் சிறப்பு தோற்றத்தில் நடிக்கவிருப்பதாகவும் கூறப்படுகிறது.

இந்த நிலையில் 'தல 59' படத்தின் பூஜை நேற்று வியாழக்கிழமை செண்டிமெண்ட் படி நடந்து முடிந்துவிட்டதாகவும், இந்த படத்தின் அதிகாரபூர்வ அறிவிப்பு குறித்த தகவல் மிக விரைவில் வெளிவரும் என்றும் கூறப்படுகிறது. 'தல 59' படத்தின் பூஜை முடிந்துவிட்டதற்கான புகைப்பட ஆதாரங்களும் இணையத்தில் வைரலாகி வருகின்றது என்பதும் குறிப்பிடத்தக்கது.

More News

மகத்-ஐஸ்வர்யா ஜோடிக்கு இன்று முதல் புதிய தொடக்கம்

பிக்பாஸ் நிகழ்ச்சியின் மூலம் பிரபலமான நடிகர் மகத் மற்றும் நடிகை ஐஸ்வர்யா இருவரும் ஒரு படத்தில் இணைந்து நடிக்கவுள்ளனர் என்று வெளியான செய்தியை ஏற்கனவே பார்த்தோம்

விமல் படத்துக்கு எதிராக பெண்கள் போராட்டம்! இலவச புரமோஷனா?

ஒரு திரைப்படத்திற்கு எதிராக போராட்டம் நடந்தால் அந்த படத்திற்கு அது இலவச விளம்பரமாகவே பார்க்கப்படுகிறது.

பரத் நடிக்கும் அடுத்த படத்திற்கு உதவிய விஜய்சேதுபதி

இயக்குனர் ஷங்கர் இயக்கிய 'பாய்ஸ்' படத்தில் அறிமுகமான நடிகர் பரத் அதன்பின்னர் 'காதல்', 'எம் மகன்', 'வெயில்', 'கண்டேன் காதலை' உள்பட பல படங்களில் நடித்துள்ளார்.

சிம்புவின் அடுத்த' ரிலீஸ் தேதி அறிவிப்பு

நடிகர் சிம்பு நடித்த 'செக்க சிவந்த வானம்' சமீபத்தில் வெளியாகி வெற்றி அடைந்த நிலையில் அவர் நடித்து முடித்துள்ள 'வந்தா ராஜாவாதான் வருவேன்' திரைப்படம் விரைவில் வெளியாகவுள்ளது.

'சிலுக்குவார்பட்டி சிங்கம்' டிரைலர் விமர்சனம்

விஷ்ணு விஷால், ரெஜினா, ஓவியா, யோகிபாபு நடிப்பில் செல்லா அய்யாவு இயக்கத்தில் உருவாகியுள்ள 'சிலுக்குவார்பட்டி சிங்கம்' திரைப்படம் வரும் 21ஆம் தேதி வெளியாகவுள்ள நிலையில்