close
Choose your channels

'தல 59' பட பூஜை முடிந்துவிட்டதா?

Friday, December 14, 2018 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

கடந்த சில வருடங்களாக அஜித் நடித்த படம் ஒன்று வெளியாகி ஓரிரு மாதங்களுக்கு பின்னரே அடுத்த படம் குறித்த பேச்சுவார்த்தையே ஆரம்பமாகும். ஆனால் 'விஸ்வாசம்' படத்தில் அஜித் நடித்து கொண்டிருந்தபோதே 'தல 59' படத்தின் பேச்சுவார்த்தை முடிந்து இயக்குனர், தயாரிப்பாளர் குறித்த செய்திகளும் வெளிவந்துவிட்டது என்பது தெரிந்ததே.

மறைந்த நடிகை ஸ்ரீதேவியின் கணவர் போனிகபூர் தயாரிப்பில் எச்.வினோத் இயக்கத்தில் 'தல 59' உருவாகவுள்ளது. இந்த படம் 'பிங்க்' படத்தின் ரீமேக் என்றும் இந்த படத்தில் அமிதாப் சிறப்பு தோற்றத்தில் நடிக்கவிருப்பதாகவும் கூறப்படுகிறது.

இந்த நிலையில் 'தல 59' படத்தின் பூஜை நேற்று வியாழக்கிழமை செண்டிமெண்ட் படி நடந்து முடிந்துவிட்டதாகவும், இந்த படத்தின் அதிகாரபூர்வ அறிவிப்பு குறித்த தகவல் மிக விரைவில் வெளிவரும் என்றும் கூறப்படுகிறது. 'தல 59' படத்தின் பூஜை முடிந்துவிட்டதற்கான புகைப்பட ஆதாரங்களும் இணையத்தில் வைரலாகி வருகின்றது என்பதும் குறிப்பிடத்தக்கது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.