close
Choose your channels

'தலைவர் 170' கேரளாவில் நடக்கும் கதையா? லைகாவின் அதிரடி விளம்பரம்..!

Saturday, September 16, 2023 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த ’ஜெயிலர்’ திரைப்படம் சமீபத்தில் வெளியாகி மிகப்பெரிய வெற்றி பெற்ற நிலையில் அடுத்ததாக அவர் ’ஜெய்பீம்’ ஞானவேல் இயக்கத்தில் உருவாக இருக்கும் ’தலைவர் 170’ என்ற படத்தில் நடிக்க உள்ளார்.

இந்த படத்தின் ஆரம்பகட்ட பணிகள் தற்போது நடைபெற்று வருவதாகவும் குறிப்பாக இந்த படத்தில் நடிக்கும் நட்சத்திரங்கள் தேர்வு நடைபெற்று வருவதாகவும் கூறப்படுகிறது.

இந்த நிலையில் லைகா நிறுவனம் இந்த படத்தை தயாரிக்க இருக்கும் நிலையில் அந்த நிறுவனத்தின் சமூக வலைதள பக்கத்தில் ஆங்கிலம் மற்றும் மலையாளத்தில் ஒரு விளம்பரம் வெளியாகி உள்ளது.

அதில் லைகா நிறுவனத்தின் அடுத்த தயாரிப்பில், ஞானவேல் இயக்கத்தில் உருவாக இருக்கும் 'தலைவர் 170’ படத்தில் நடிப்பதற்கு திருவனந்தபுரத்தைச் சேர்ந்த விருப்பமுள்ளவர்கள் விண்ணப்பம் அனுப்பலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. கேரளாவில் உள்ள அறிமுக நடிகர்களை இந்த படத்தில் இணைக்க இருப்பதால் இந்த படத்தின் கதைக்களம் கேரளாவாக இருக்கும் என்று கூறப்படுகிறது. இந்த விளம்பரத்தை பார்த்து கேரளாவில் உள்ள பலர் ரஜினி படத்தில் நடித்த ஆர்வத்துடன் விண்ணப்பித்து வருவதாகவும் கூறப்படுகிறது

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் முக்கிய வேடத்தில் நடிக்கும் இந்த படத்தில் அமிதாப்பச்சன், மஞ்சு வாரியர், துஷாரா விஜயன் ஆகியோர் நடிக்க இருப்பதாக கூறப்படுகிறது. காவல்துறை அதிகாரியாக ரஜினிகாந்த் இந்த படத்தில் நடிக்க இருப்பதாகவும் உண்மை சம்பவத்தின் அடிப்படையில் உருவான திரைக்கதை தான் இந்த படம் என்றும் கூறப்படுகிறது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.