close
Choose your channels

'தலைவர் 170' படப்பிடிப்பு எப்போது? யார் யார் நடிக்கிறார்கள்?

Tuesday, September 5, 2023 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த ’ஜெயிலர்’ திரைப்படத்தின் மிகப்பெரிய வெற்றியை அடுத்து அவர் நடிக்க இருக்கும் அடுத்த திரைப்படமான ’தலைவர் 170’ படத்தின் ஆரம்பகட்ட பணிகள் நடைபெற்று வருவதாகவும் விரைவில் படப்பிடிப்பு தொடங்க இருப்பதாகவும் வெளிவந்த செய்தியை பார்த்தோம்.

இந்த நிலையில் தற்போது வந்துள்ள தகவல் படி ’தலைவர் 170 ’படத்தின் படப்பிடிப்பு செப்டம்பர் மூன்றாவது வாரம் தொடங்க இருப்பதாகவும் சென்னையில் உள்ள தனியார் ஸ்டூடியோவில் இந்த படத்திற்கான செட் அமைக்கும் பணி தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வருவதாகவும் கூறப்படுகிறது.

ரஜினியுடன் இந்த படத்தில் அமிதாப்பச்சன், மஞ்சுவாரியர், பகத் பாசில், ரானா , துஷாரா விஜயன் ஆகியோர் இணைந்திருப்பதாகவும் இந்த படத்தில் நடிக்கும் நட்சத்திரங்கள் குறித்த அதிகாரப்பூர்வமான அறிவிப்பு படப்பிடிப்புக்கு முன்பே வெளியாகும் என்றும் கூறப்படுகிறது.

ரஜினிகாந்த் இந்த படத்தில் காவல்துறை அதிகாரியாக நடிக்க இருப்பதாகவும், உண்மை சம்பவத்தின் அடிப்படையில் ஞானவேல் இந்த படத்தின் திரைக்கதையை அமைத்திருப்பதாகவும் கூறப்படுகிறது.

’ஜெயிலர்’ திரைப்படத்தின் மிகப்பெரிய வெற்றி ’தலைவர் 170’ படத்தின் எதிர்பார்ப்பை அதிகரித்து உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.   

Comments

Welcome to IndiaGlitz comments! Please keep conversations courteous and relevant to the topic. To ensure productive and respectful discussions, you may see comments from our Community Managers, marked with an "IndiaGlitz Staff" label. For more details, refer to our community guidelines.
settings
Login to post comment
Cancel
Comment