close
Choose your channels

'தலைவர் 170' படத்தில் இணைந்த 'ஜெய்பீம்' ஒட்டுமொத்த குழு.. ஒரே ஒருவர் தான் மாற்றம்..!

Thursday, October 5, 2023 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிக்க இருக்கும் ’தலைவர் 170’ என்ற படத்தின் பூஜை நேற்று நடைபெற்றது என்பதும் நேற்று படப்பிடிப்பும் தொடங்கி விட்டதாக தகவல் வெளியானது.

இந்த படத்தின் பூஜை குறித்த புகைப்படங்களை லைக்கா நிறுவனம் நேற்று தனது சமூக வலைத்தளத்தில் வெளியிட்ட நிலையில் அந்த புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகின.

இந்த படத்தில் ரஜினிகாந்த், அமிதாப் பச்சன், பகத் பாஸில், ராணா டகுபாய், மஞ்சு வாரியர், ரித்திகா சிங் மற்றும் துஷாரா விஜயன் ஆகியோர் நடிக்க இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில் இந்த படத்தின் டெக்னிக்கல் குழு குறித்த தகவல் தற்போது வெளியாகியுள்ளது. இந்த படத்தின் ஒளிப்பதிவாளர் எஸ்ஆர் கதிர் என்றும், படத்தொகுப்பாளர் ஃபிலோமின்ராஜ் என்றும், கலை இயக்குனர் கதிர் என்றும், ஸ்டண்ட் இயக்குனர்கள் அன்பறிவ் என்றும் தகவல் வெளியாகியுள்ளது.

இவர்கள் நான்கு பேருமே ஞானவேல் இயக்கத்தில் உருவான முந்தைய திரைப்படமான ’ஜெய்பீம்’ படத்தில் பணி புரிந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது. ‘ஜெய்பீம்’ படத்தில் இசையமைப்பாளராக பணிபுரிந்த சீன் ரோல்டானுக்கு பதில் ’தலைவர் 170’ படத்தில் அனிருத் இசையமைக்க உள்ளார் என்பதும் இந்த ஒரு மாற்றம் தவிர ஒட்டுமொத்த ‘ஜெய்பீம்’ டெக்னிக்கல் குழு, ‘தலைவர் 170’ படத்தின் இணைந்த உள்ளதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன.

இந்த படம் மிகப்பெரிய பட்ஜெட்டில் பிரமாண்டமாக உருவாக இருப்பதாகவும் இந்த படம் அடுத்த ஆண்டு வெளியாகும் என்பதும் குறிப்பிடத்தக்கது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.   

Comments

Welcome to IndiaGlitz comments! Please keep conversations courteous and relevant to the topic. To ensure productive and respectful discussions, you may see comments from our Community Managers, marked with an "IndiaGlitz Staff" label. For more details, refer to our community guidelines.
settings
Login to post comment
Cancel
Comment