'உந்தன் கண்களில் என்னடியோ? எம்ஜிஆர் ஜெயலலிதாவாகவே மாறிய 'தலைவி' பாடல்!

  • IndiaGlitz, [Monday,August 30 2021]

பிரபல பாலிவுட் நடிகை கங்கனா ரனாவத் நடித்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாறு திரைப்படமான ‘தலைவி’ படத்தில் இடம்பெற்ற ’உந்தன் கண்களில் என்னடியோ’ என்ற பாடல் சற்றுமுன் வெளியாகியுள்ள நிலையில் இந்த பாடல் வைரலாகி வருகிறது

ஜிவி பிரகாஷ் இசையில், நகுல் அபயங்கர் மற்றும் நிரஞ்சனா ரமணன் குரலில், மதன் கார்க்கி பாடல் வரிகளில் உருவாகிய ’உந்தன் கண்களில் என்னடியோ’ என்ற பாடல் சற்று முன் வெளியாகி உள்ளது. அரவிந்த்சாமி மற்றும் கங்கனா ரனாவத் ஆகிய இருவரும் எம்ஜிஆர் மற்றும் ஜெயலலிதா கேரக்டரில் இந்த படத்தில் நடித்துள்ள நிலையில் இந்த பாடலில் அச்சு அசலாக இருவரும் எம்ஜிஆர், ஜெயலலிதா ஆகவே மாறிவிட்டதாக இந்த பாடலுக்கு கமெண்ட்ஸ்கள் பதிவாகி வருகிறது

முதல் முறை கேட்கும்போதே பாடல் மனதை கவர்ந்துவிட்டதாகவும் ஜிவி பிரகாஷ் மிக அருமையாக கம்போஸ் செய்திருப்பதாகவும், உண்மையாகவே எம்ஜிஆர் ஜெயலலிதா நடித்த படங்களுக்கான இசை போன்று இந்த பாடல் இருப்பதாகவும் பலர் பாராட்டு தெரிவித்து வருகின்றனர். ஏ.எல். விஜய் இயக்கத்தில் கங்கனா ரனவத், அரவிந்த்சாமி, நாசர், பாக்யஸ்ரீ, ராஜ் அர்ஜூன், மதுபாலா உள்பட பலர் நடித்த இந்த திரைப்படம் செப்டம்பர் 10 ஆம் தேதி வெளியாக உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

More News

15 வயது சிறுமி முதல் 21 பெண்கள்: 61 வயது நடிகர் மீது பாலியல் குற்றச்சாட்டு!

61 வயது நடிகர் ஒருவர் 15 வயது சிறுமி முதல் 51 வயது பெண் வரை 21 பெண்களை பாலியல் வன்கொடுமை செய்துள்ளதாக வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது 

உலகத்தில் யாரும் செய்யாததையா அவர் செஞ்சிட்டார்: கே.டி.ராகவன் விவகாரம் குறித்து சீமான்!

பாஜக பொதுச் செயலாளராக இருந்த கேடி ராகவனின் சர்ச்சைக்குரிய வீடியோ ஒன்று இணையதளங்களில் வைரலானது என்பதும் இந்த வீடியோவை வெளியிட்ட யூடியூபர் மதன் பாஜகவில் இருந்து நீக்கப்பட்டார்

பிரபல நடிகை வீட்டில் போதைப்பொருள்? அதிகாரிகள் சோதனையால் பரபரப்பு!

பாலிவுட் மற்றும் கன்னட திரையுலகில் போதைப்பொருள் விவகாரம் கடந்த ஆண்டு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது என்பதும், பாலிவுட் நடிகை ரியா சக்கரவர்த்தி கன்னட நடிகைகள் ராகினி திவேதி,

ப்ரியங்கா சோப்ராவின் ஹாட் புகைப்படங்கள்: ஸ்னாக்ஸ் சாப்பிடும் கணவர்!

பிரபல நடிகை பிரியங்கா சோப்ரா தனது ஹாட் புகைப்படங்களை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவு செய்துள்ள நிலையில் அதே புகைப்படத்தில் அவரது கணவர் ஸ்னாக் சாப்பிடுவது போன்று உள்ளதை

தன்னுடைய மகளுக்காக ஹீரோவை தேடும் பணியில் 80ஸ் நடிகை....!

தமிழ் சினிமாவில், கடந்த 1992-ல் நடிகர் கார்த்திக் அவரோடு "மிஸ்டர் கார்த்திக்" என்ற திரைப்படத்தில் நாயகியாக அறிமுகமானவர் தான் நடிகை சிவரஞ்சனி