தளபதி ரசிகர்களுக்கு கிடைத்த அட்டகாசமான புத்தாண்டு பரிசு

  • IndiaGlitz, [Saturday,December 28 2019]

தளபதி விஜய் நடித்து வரும் ’தளபதி 64’ படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில் இந்த படத்தின் மொத்த படப்பிடிப்பும் வரும் பிப்ரவரிக்குள் முடிந்து விடும் என்று எதிர்ப்பார்க்கப்படுகிறது. லோகேஷ் அந்த அளவிற்கு இப்படத்தின் படப்பிடிப்பை விறுவிறுப்பாக நடத்தி கொண்டு வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது

இந்த நிலையில் இந்த படத்தின் டைட்டிலுடன் கூடிய ஃபர்ஸ்ட்லுக் போஸ்டர் புத்தாண்டில் வெளியாகும் என செய்திகள் வெளியான நிலையில் தற்போது அதற்கு முன்பே புத்தாண்டு பரிசு தளபதி ரசிகர்களுக்கு கிடைத்துள்ளது என்பது உறுதி செய்யப்பட்டுள்ளது

‘தளபதி 64 ’படத்தின் டைட்டிலுடன் கூடிய பர்ஸ்ட் லுக் வரும் 31ம் தேதி மாலை 5 மணிக்கு வெளியாகும் என படக்குழுவினர் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளனர். இந்த அறிவிப்பை அடுத்து தளபதி விஜய் ரசிகர்கள் உற்சாகத்தில் உச்சத்தில் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது

விஜய், மாளவிகா மோகனன், விஜய்சேதுபதி, ஆண்ட்ரியா, சாந்தனு, அர்ஜூன் தாஸ், சஞ்சீவ், ஸ்ரீமான், ரம்யா, கெளரி கிஷான், தீனா உள்பட பலர் நடித்து வரும் இந்த படத்திற்கு அனிருத் இசையமைத்து வருகிறார். சத்யன் சூரியன் ஒளிப்பதிவில், பிலோமினா ராஜ் படத்தொகுப்பில் உருவாகி வரும் இந்த படத்தை விஜய்யின் உறவினர் சேவியர் பிரிட்டோ தயாரித்து வருகிறார். இந்த படம் வரும் ஏப்ரல் மாதம் வெளியாகவுள்ளது

More News

இளம்பெண்ணை கொலை செய்த கணவரும் கொழுந்தனாரும்.. டிக்டாக் அடிமையால் ஏற்பட்ட விளைவு

டிக்டாக் செயலி இளைஞர்கள் பலரை அடிமைப்படுத்தி வந்த நிலையில் இதனால் குடும்பத்தில் பல விபரீதங்கள் நடந்து வரும் சம்பவங்களை அவ்வப்போது பார்த்து வருகிறோம்.

குஷ்பு மகளின் கனவை நனவாக்கிய சூப்பர் ஸ்டார்..!

குஷ்புவின் இளைய மகள் அனந்திதாவுக்கு ரஜினியை சந்திக்கும் வாய்ப்பு கிடைத்தது. அவர் ரஜினியுடன் சேர்ந்து எடுத்த புகைப்படத்தை குஷ்பு ட்விட்டரில் வெளியிட்டார்.

100 ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு கடும் குளிர்.. 2.4 டிகிரி வெப்பநிலையில் இருக்கும் இந்திய நகரம்.

டெல்லியில் வரலாறு காணாத அளவுக்கு வெப்ப நிலை 3.6 டிகிரி செல்ஸியஸாக குறைந்துள்ளது. எலும்பைத்துளைக்கும் குளிரினால் தேசிய தலைநகரம் வெகுவாக பாதிக்கப்பட்டுள்ளத்.  வடமாநிலங்களில் கடந்த சில வாரங்களாக கடுங்குளிர் நிலவுகிறது.

அவரே தான் இவர்..! ரசிகர்களை குழப்பிய மைக்கேல் ஜாக்சன் தோற்ற நடிகர்.

மைக்கேல் ஜாக்சனைப் போன்ற தோற்றம்கொண்ட இளைஞர் ஒருவரின் புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரலாகிவருகின்றன.

பொங்கல் விடுமுறையில், மாணவர்கள் மோடியின் சொற்பொழிவைக் கேட்க பள்ளிகளில் ஏற்பாடு..! தமிழக முதல்வர்.

வீடுகளில் தொலைக்காட்சி இல்லாத மாணவர்கள் பொங்கல் விடுமுறையில் பள்ளிக்கு வந்து பிரதமர் மோடியின் சொற்பொழிவைக் கேட்கலாம் என தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி தெரிவித்துள்ளார்.