close
Choose your channels

தளபதி ரசிகர்களுக்கு கிடைத்த அட்டகாசமான புத்தாண்டு பரிசு

Saturday, December 28, 2019 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

தளபதி விஜய் நடித்து வரும் ’தளபதி 64’ படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில் இந்த படத்தின் மொத்த படப்பிடிப்பும் வரும் பிப்ரவரிக்குள் முடிந்து விடும் என்று எதிர்ப்பார்க்கப்படுகிறது. லோகேஷ் அந்த அளவிற்கு இப்படத்தின் படப்பிடிப்பை விறுவிறுப்பாக நடத்தி கொண்டு வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது

இந்த நிலையில் இந்த படத்தின் டைட்டிலுடன் கூடிய ஃபர்ஸ்ட்லுக் போஸ்டர் புத்தாண்டில் வெளியாகும் என செய்திகள் வெளியான நிலையில் தற்போது அதற்கு முன்பே புத்தாண்டு பரிசு தளபதி ரசிகர்களுக்கு கிடைத்துள்ளது என்பது உறுதி செய்யப்பட்டுள்ளது

‘தளபதி 64 ’படத்தின் டைட்டிலுடன் கூடிய பர்ஸ்ட் லுக் வரும் 31ம் தேதி மாலை 5 மணிக்கு வெளியாகும் என படக்குழுவினர் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளனர். இந்த அறிவிப்பை அடுத்து தளபதி விஜய் ரசிகர்கள் உற்சாகத்தில் உச்சத்தில் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது

விஜய், மாளவிகா மோகனன், விஜய்சேதுபதி, ஆண்ட்ரியா, சாந்தனு, அர்ஜூன் தாஸ், சஞ்சீவ், ஸ்ரீமான், ரம்யா, கெளரி கிஷான், தீனா உள்பட பலர் நடித்து வரும் இந்த படத்திற்கு அனிருத் இசையமைத்து வருகிறார். சத்யன் சூரியன் ஒளிப்பதிவில், பிலோமினா ராஜ் படத்தொகுப்பில் உருவாகி வரும் இந்த படத்தை விஜய்யின் உறவினர் சேவியர் பிரிட்டோ தயாரித்து வருகிறார். இந்த படம் வரும் ஏப்ரல் மாதம் வெளியாகவுள்ளது

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.