'தளபதி 64' படத்தின் அடுத்தகட்ட படப்பிடிப்பு குறித்த தகவல்!

  • IndiaGlitz, [Saturday,October 19 2019]

தளபதி விஜய்யின் ‘பிகில்’ திரைப்படம் வரும் 25ஆம் தேதி தீபாவளி விருந்தாக உலகம் முழுவதும் பிரமாண்டமாக வெளியாக உள்ள நிலையில், இந்த படத்தின் ஓப்பனிங் வசூலில் புதிய சாதனை படைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த நிலையில் தளபதி விஜய் நடிக்கும் அடுத்த படமான ’தளபதி 64’ படத்தின் முதல் கட்ட படப்பிடிப்பு சென்னையில் முடிவடைந்துள்ளது. இதனை அடுத்து இன்னும் ஒரு சில நாட்களில் படக்குழுவினர் இந்த படத்தின் இரண்டாம்கட்ட படப்பிடிப்பிற்காக டெல்லி செல்லவுள்ளனர்.

டெல்லியில் ’தளபதி 64’ படத்தின் படப்பிடிப்பு 20 நாட்கள் நடைபெற உள்ளதாகவும், இந்த படப்பிடிப்பின் போது ஒரு சில ஆக்ஷன் காட்சிகளில் விஜய் நடிக்கவுள்ளதாகவும் செய்திகள் வெளியாகியுள்ளன.

‘தளபதி 64’ படத்தின் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கிய கைதி’ திரைப்படமும் விஜய்யின் ’பிகில்’ திரைப்படத்துடன் வெளியாக உள்ள நிலையில், ‘கைதி’ ரிலீஸ் குறித்த டென்ஷன் இன்றி அவர் ‘தளபதி 64’ படப்பிடிப்பில் முழுமையாக மூழ்கியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

விஜய், விஜய்சேதுபதி, மாளவிகா மேனன், சாந்தனு, அந்தோணி வர்கீஸ் உள்பட பலர் நடிக்கும் ‘தளபதி 64’ திரைப்படத்திற்கு அனிருத் இசையமைக்கின்றார். இந்த படம் அடுத்த ஆண்டு கோடை விடுமுறையில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

More News

ரஜினியுடன் 40 நாள் நடித்த அனுபவம்: 'தர்பார்' நடிகையின் உற்சாக பேட்டி

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த 'தர்பார்' திரைப்படத்தின் படப்பிடிப்பு முடிந்து தற்போது போஸ்ட் புரடொக்சன்ஸ் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வரும்

'அசுரன்' பட வில்லன் போன்றவர் முக ஸ்டாலின்: அமைச்சர் ஜெயகுமார்

தனுஷ் நடித்த 'அசுரன்' திரைப்படத்தை சமீபத்தில் பார்த்த திமுக தலைவர் முக ஸ்டாலின் அந்த படத்தில் நடித்த தனுஷ் மற்றும் இயக்குனர் வெற்றிமாறன் ஆகியோர்களை பாராட்டி தனது டுவிட்டரில் பதிவு செய்தார்.

'இந்தியன் 2' படத்தில் கமலின் வயது: ஒரு ஆச்சரியமான தகவல்

உலக நாயகன் கமலஹாசன் நடித்த 'இந்தியன்' திரைப்படம் கடந்த 1996ஆம் ஆண்டு வெளிவந்த நிலையில் தற்போது இந்த படத்தின் இரண்டாம் பாகமான 'இந்தியன் 2' என்ற திரைப்படம் உருவாகி வருகிறது

'தல 60' படத்தின் டைட்டில் அதிகாரபூர்வ அறிவிப்பு

தல அஜித் நடித்த 'நேர்கொண்ட பார்வை' திரைப்படம் சமீபத்தில் வெளிவந்து மிகப்பெரிய வெற்றி பெற்ற நிலையில் அதே கூட்டணியில் மீண்டும் 'தல 60' திரைப்படம் உருவாகும் என அறிவிக்கப்பட்டிருந்தது

ஆதித்ய அருணாச்சலம் என் அப்பா: 'தர்பார்' குறித்து பிரபல நடிகை

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் இயக்குநர் ஏஆர் முருகதாஸ் இயக்கத்தில் லைகா நிறுவனத்தின் பிரமாண்டமான தயாரிப்பில் உருவாகியுள்ள