close
Choose your channels

ரஜினியுடன் 40 நாள் நடித்த அனுபவம்: 'தர்பார்' நடிகையின் உற்சாக பேட்டி

Saturday, October 19, 2019 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த ‘தர்பார்’ திரைப்படத்தின் படப்பிடிப்பு முடிந்து தற்போது போஸ்ட் புரடொக்சன்ஸ் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில் இந்த படத்தில் லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா நாயகியாகவும், நிவேதா தாமஸ் ரஜினிக்கு மகளாகவும் நடித்துள்ள செய்திகள் ஏற்கனவே வெளிவந்தது என்பதை பார்த்தோம்

இந்த நிலையில் பிரபல தொலைக்காட்சி நடிகை ஷமதா அஞ்சன் இந்த படத்தில் முக்கிய கேரக்டரில் நடித்துள்ளார். இவர் ‘தர்பார்’ படத்தில் 40 நாட்கள் நடித்துள்ளதாகவும், இவற்றில் பெரும்பாலான காட்சிகள் ரஜினியுடன் இணைந்து நடித்துள்ளதாகவும் பேட்டி ஒன்றில் உற்சாகமாக கூறியுள்ளார்.

இந்த படத்தில் தான் நடித்த கேரக்டர் குறித்து வெளியே சொல்வதற்கு அனுமதி தனக்கு இல்லை என்றும், ஆனால் ரஜினியுடன் நடித்த ஒவ்வொரு நாளும் மறக்க முடியாத நாளாக இருந்ததாகவும், அவரை போல் ஒரு எளிமையான நடிகரை தான் பார்த்ததில்லை என்றும் கூறினார்.

இந்தியில் ‘எவரெஸ்ட்’ என்ற தொலைக்காட்சி தொடரிலும் தமிழ் உள்பட பல மொழி விளம்பர படங்களிலும் நடித்துள்ள ஷமதா அஞ்சன், இந்த படத்தில் முக்கிய கேரக்டரை தன்னை நம்பி கொடுத்த இயக்குனருக்கு நன்றி என்றும், இயக்குனர் ஏ.ஆர்.முருகதாஸ் மிகவும் ஷார்ப்பானவர் என்றும் என்னை பார்த்து ஒருசில நிமிடங்கள் பேசியவுடனே தனக்கு இவ்வளவு பெரிய கேரக்டரை கொடுத்துவிட்டதாகவும் மேலும் அந்த பேட்டியில் ஷமதா கூறியுள்ளார்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.