close
Choose your channels

'தளபதி 67' பூஜை. விஜய், லோகேஷ் கலந்து கொண்டதாக தகவல்!

Monday, December 5, 2022 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

விஜய் நடித்துள்ள ’வாரிசு’ திரைப்படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து இந்த படம் வரும் பொங்கல் தினத்தில் வெளியாக உள்ள நிலையில் விஜய் நடிக்கவிருக்கும் அடுத்த திரைப்படமான ’தளபதி 67’ என்ற படத்தின் பூஜை இன்று சென்னையில் நடைபெற்றதாக தகவல் வெளியாகியுள்ளன.

சென்னை ஏவிஎம் ஸ்டுடியோவில் ’தளபதி 67’ படத்தின் பூஜை நடந்ததாகவும் இதில் விஜய், லோகேஷ் கனகராஜ் உள்பட படக்குழுவினர் கலந்து கொண்டதாகவும் கூறப்படுகிறது.

’மாஸ்டர்’ படத்திற்கு பின்னர் மீண்டும் தளபதி விஜய், லோகேஷ் கனகராஜ், அனிருத், லலித் ஆகியோர் மீண்டும் இணையும் இந்தப் படத்தில் கமல்ஹாசன், சூர்யா, கார்த்தி ஆகியோர் விக்ரம், ரோலக்ஸ், மற்றும் டில்லி ஆகிய சிறப்பு தோற்றங்களில் நடிக்க இருப்பதாகவும் இதுவும் ஒரு லோகேஷ் கனகராஜ் LCU படம் என்றும் கூறப்படுகிறது.

இந்த படத்தின் பூஜை இன்று நடைபெற்ற போது பார்வையாளர்கள் யாருக்கும் மொபைல் போன் அனுமதி இல்லை என்பதால் இந்த படத்தின் பூஜை மற்றும் வீடியோ குறித்த எந்த தகவலும் சமூக வலைதளங்களில் வெளியாகவில்லை. இருப்பினும் படக்குழுவினர் விரைவில் இதுகுறித்த தகவலை அதிகாரப்பூர்வமாக அறிவிப்பார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

தமிழ் சினிமாவின் மிகப்பெரிய பட்ஜெட்டில் உருவாக இருக்கும் இப்படத்தின் சாட்டிலைட் மற்றும் டிஜிட்டல் வியாபாரம் ஏற்கனவே முடிந்து விட்டதாகவும் இதன் மூலம் ஒரு கணிசமான தொகை தயாரிப்பாளர் லலித்துக்கு கிடைத்துள்ளதாகவும் கூறப்படுகிறது.

தளபதி விஜய் ஜோடியாக த்ரிஷா நடிக்க இருப்பதாக கூறப்படும் நிலையில் இந்த படத்தில் சஞ்சய் தத், மிஸ்கின், கவுதம் மேனன் உள்பட பலர் நடிக்க இருப்பதாகவும் இந்த படத்தில் நடிக்கும் நட்சத்திரங்கள் மற்றும் தொழில்நுட்ப கலைஞர்களின் அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்றும் கூறப்படுகிறது.
 

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.