close
Choose your channels

'தளபதி 67' ரிலீஸ் தேதி லாக்.. பக்கா பிளான் போடும் லோகேஷ் கனகராஜ்..!

Thursday, February 2, 2023 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

தளபதி விஜய் நடிப்பில், இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில், அனிருத் இசையில் உருவாகி வரும் திரைப்படம் ’தளபதி 67’. அந்த படத்தின் படப்பிடிப்பு தற்போது காஷ்மீரில் நடைபெற்று வரும் நிலையில் கடந்த இரண்டு நாட்களாக இந்த படத்தில் நடிக்கும் நட்சத்திரங்கள் குறித்த அதிகாரப்பூர்வ தகவல் வெளியானதை பார்த்தோம்.

இந்த படத்தில் விஜய்யுடன் த்ரிஷா, சஞ்சய்தத், பிரியா ஆனந்த், சாண்டி மாஸ்டர், மிஷ்கின், மன்சூர் அலிகான், மாத்யூ தாமஸ், கௌதம் மேனன் மற்றும் ஆக்சன் கிங் அர்ஜுன் ஆகியோர் நடிக்க இருக்கும் நிலையில் இந்த படம் இதுவரை இல்லாத அளவில் இந்திய திரை உலகிலேயே மிகப்பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது.

ரூ.500 கோடியில் இருந்து 800 கோடி வரை இந்த படம் வியாபாரம் செய்யும் என்றும் வசூலிலும் இந்த படம் மிகப்பெரிய சாதனை செய்யும் என்றும் கோலிவுட் வட்டாரங்கள் கூறி வருகின்றனர்.

இந்த நிலையில் ’தளபதி 67’ படத்தை வரும் ஆயுத பூஜை விடுமுறை தினத்தில் ரிலீஸ் செய்ய படக்குழுவினர் திட்டமிட்டுள்ளதாகவும் அதற்கு தகுந்தார் போல் படப்பிடிப்புகள் மற்றும் போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் நடைபெற்று வருவதாகவும் கூறப்படுகிறது. அதாவது 2023 ஆம் ஆண்டு அக்டோபர் 19ஆம் தேதி ஆயுத பூஜை விடுமுறையை ஒட்டி ‘தளபதி 67’ ரிலீஸ் ஆக அதிக வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது.

மேலும் தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம், ஹிந்தி என இந்த படம் பல மொழிகளில் டப்பிங் செய்யப்படும் என்றும் அதை போல் உலகில் கிட்டத்தட்ட அனைத்து நாடுகளிலும் இந்த படத்தை ரிலீஸ் செய்ய திட்டமிட்டப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. விஜய்யின் திரையுலக வரலாற்றில் இது போன்ற ஒரு திரைப்படம் ரிலீஸ் ஆனதில்லை என்ற நிலை இந்த படம் ரிலீஸ் ஆன பிறகு ஏற்படும் என்று கூறப்படுகிறது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.   

Comments

Login to post comment
Cancel
Comment