'தளபதி 68' பட இயக்குனர் இவர்தானா..? அப்ப அட்லி, கார்த்திக் சுப்புராஜ் என்ன ஆச்சு?

  • IndiaGlitz, [Friday,May 05 2023]

ட்விட்டர் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் திடீரென ’தளபதி 68’ படத்தின் இயக்குனர் குறித்த ஹேஸ்டேக் ட்ரெண்ட் ஆகி வருவது விஜய் ரசிகர்கள் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

தளபதி விஜய் நடித்து வரும் 67வது திரைப்படமான ’லியோ’ படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இன்னும் ஓரிரு மாதங்களில் இந்த படத்தின் படப்பிடிப்பு முடிந்து விடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஏற்கனவே அக்டோபர் 19ஆம் தேதி இந்த படம் வெளியாக இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது என்பது தெரிந்ததே.

நிலையில் கடந்த சில நாட்களாக ’தளபதி 68’ படத்தின் செய்திகள் கசிந்து வந்தன. மேலும் இந்த படத்தை பிரபல தெலுங்கு இயக்குனர் கோபிச்சந்த் இயக்க இருப்பதாக கூறப்பட்டது. சமீபத்தில் இவரது இயக்கத்தில் உருவான ‘வீரசிம்ஹ ரெட்டி’ என்ற திரைப்படம் மாஸ் வெற்றி பெற்றது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் தற்போது கோபிசந்த், விஜய்யின் அடுத்த படத்தை இயக்குவது கிட்டத்தட்ட செய்தி உறுதி செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. தளபதி விஜய் நடிப்பில் கோபிசந்த் இயக்கத்தில் உருவாகும் படம் தான் ’தளபதி 68’ என்றும் இந்த படத்தின் அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்றும் கூறப்படுகிறது.

ஏற்கனவே கார்த்திக் சுப்புராஜ், அட்லீ உள்ளிட்டோர் விஜய்யின் அடுத்த படத்தை இயக்குவார்கள் என்று கூறப்பட்ட நிலையில் தற்போது திடீரென கோபிசந்த் தான் ’தளபதி 68’ படத்தை இயக்க உள்ளார் என்று கூறப்படுவது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

More News

ஜெயம் ரவியின் 'இறைவன்' ரிலீஸ் தேதி இதுவா? சிவகார்த்திகேயனுடன் மோதலா..?

ஜெயம் ரவி நடித்து முடித்துள்ள அடுத்த திரைப்படமான 'இறைவன்' திரைப்படத்தின் ரிலீஸ் தேதி குறித்த தகவல் கசிந்துள்ள நிலையில் அநேகமாக 'இறைவன்' மற்றும் 'மாவீரன்' ஆகிய இரண்டு

நம்ம ஷிவானி நாராயணனுக்கு பிறந்த நாள்… இன்ஸ்டாவில் வாழ்த்தும் ரசிகர்கள்!

பிக்பாஸ் சீசன் 4 நிகழ்ச்சியில் போட்டியாளராகக் கலந்துகொண்டு பட்டித்தொட்டி எங்கும் பிரபலமானவர் ஷிவானி நாராயணன்.

லைவ் வீடியோவில் கண்ணீர் சிந்திய 'அந்நியன்' பட நடிகை சதா… ஆறுதல் கூறும் ரசிகர்கள்!

அண்டங்காக்கா கொண்டக்காரி எனும் அந்நியன் பாடலுக்கு உற்சாகமான நடனத்தைக் கொடுத்து ரசிகர்கள் மனதில் கெட்டியாக இடம்பிடித்துக் கொண்டவர்தான் நடிகை சதா.

கமல்ஹாசன் - சிவகார்த்திகேயன் படத்தின் படப்பிடிப்பு தொடக்கம்: மாஸ் வீடியோ ரிலீஸ்..!

உலகநாயகன் கமல்ஹாசன் தயாரிப்பில், சிவகார்த்திகேயன் நடிப்பில், ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் உருவாகும் திரைப்படம் குறித்த அறிவிப்பு சமீபத்தில் வெளியானது.

இந்த வார ஓடிடி ரிலீஸ் விவரங்கள்: தமிழ் சினிமா ரசிகர்கள் ஏமாற்றம்..!

ஒவ்வொரு வாரமும் திரையரங்குகளில் குறைந்தபட்சம் நான்கு திரைப்படங்கள் ரிலீஸ் ஆகி கொண்டிருக்கும் நிலையில் ஓடிடியிலும் திரையரங்குகளில் வெளியான திரைப்படங்கள்