close
Choose your channels

'தளபதி 68' ஹாலிவுட் படத்தின் ரீமேக்கா? விஜய்க்கு என்ன கேரக்டர்?

Tuesday, November 14, 2023 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

தளபதி விஜய் நடித்த ’லியோ’ திரைப்படம் ’ஹிஸ்ட்ரி ஆப் வயலன்ஸ்’ என்ற ஹாலிவுட் படத்தின் ரீமேக் என்று அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் தற்போது அவர் நடித்துவரும் ’தளபதி 68’ படமும் ஒரு ஹாலிவுட் படத்தின் ரீமேக் என்று சமூக வலைதளங்களில் ஒரு கருத்து பரவி வருகிறது

தளபதி விஜய் நடிப்பில், வெங்கட் பிரபு இயக்கத்தில், யுவன் சங்கர் ராஜா இசையில், ஏஜிஎஸ் நிறுவனத்தின் பிரம்மாண்ட தயாரிப்பில் உருவாகி வரும் திரைப்படம் ’தளபதி 68’. இந்த படத்தின் படப்பிடிப்பு கடந்த சில மாதங்களாக நடைபெற்று வருகிறது என்பதும் முதல் கட்ட படப்பிடிப்பு சென்னையில், இரண்டாம் கட்ட படப்பிடிப்பு தாய்லாந்தில் நடந்த நிலையில் மூன்றாம் கட்டப்பட்ட படிப்பை தற்போது மீண்டும் சென்னையில் உள்ள தனியார் ஸ்டுடியோவில் நடைபெற உள்ளது.

இந்த நிலையில் இந்த படம் சூப்பர் ஹிட் ஆன ஹாலிவுட் திரைப்படமான ’லூப்பர்’ என்ற படத்தின் ரீமேக் என்று கூறப்படுகிறது. ஆனால் இந்த தகவலை படக்குழுவினர் உறுதி செய்யவில்லை. மேலும் இந்த படத்தில் தளபதி விஜய் ஒரு நெகட்டிவ் கேரக்டரில் நடிக்க இருப்பதாகவும் கூறப்படுகிறது.

தளபதி விஜய் இரண்டு வித்தியாசமான கேரக்டரில் நடிக்க உள்ள நிலையில் இந்த படத்தில் அவருடன் சினேகா, லைலா, பிரசாந்த், பிரபுதேவா, மோகன் உள்ளிட்ட பலர் நடித்து வருகின்றனர்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.