close
Choose your channels

விஜய்யின்  'தளபதி 68' பூஜை எப்போது?  படக்குழுவினர் யார் யார்?

Saturday, September 30, 2023 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

தளபதி விஜய் நடித்து முடித்துள்ள ’லியோ’ திரைப்படம் வரும் அக்டோபர் 19ஆம் தேதி வெளியாக இருக்கும் நிலையில் அக்டோபர் 3 ஆம் தேதி அவர் நடிக்க இருக்கும் ’தளபதி 68’ படத்தின் பூஜை நடைபெற இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

இந்த பூஜையில் விஜய் உட்பட படக்குழுவினர் கலந்து கொள்வார்கள் என்றும் கூறப்படுகிறது. அக்டோபர் 3ஆம் தேதி நடைபெறும் பூஜைக்கு பின்னர் பாடல் ஒன்றின் படப்பிடிப்பு நடைபெறும் என்றும் கூறப்படுகிறது.

விஜய்யுடன் பிரியங்கா மோகன் இந்த படத்தில் நடிப்பது கிட்டத்தட்ட உறுதி செய்யப்பட்டிருப்பதாகவும் அரவிந்த்சாமி, சினேகா, ஜெய், அபர்ணாதாஸ், பிரபுதேவா உள்ளிட்டோர் இந்த படத்தில் நடிக்க இருப்பதாகவும் கூறப்படுகிறது.

யுவன் சங்கர் ராஜா இசையில், வெங்கட் பிரபு இயக்கத்தில் உருவாக இருக்கும் இந்த படத்தை ஏஜிஎஸ் நிறுவனம் பிரமாண்டமாக தயாரிக்கவுள்ளது. மேலும் அக்டோபர் 3 ஆம் தேதி நடைபெறும் பூஜை குறித்த ஸ்டில்கள் ’லியோ’ படத்தின் ரிலீஸ்க்கு பின்னர் வெளியாகும் என்று தெரிகிறது.

 

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.