'லியோ' ரிலீஸ் ஆயிருச்சு.. நாம ஸ்டார்ட் பண்ண வேண்டியதுதான்: அர்ச்சனா கல்பாதி ட்விட்..!

  • IndiaGlitz, [Thursday,October 19 2023]

தளபதி விஜய் நடித்த ‘லியோ’ திரைப்படம் இன்று திரையரங்குகளில் பிரமாண்டமாக வெளியாகி பெரும்பாலான ஊடகங்களில் பாசிட்டிவ் விமர்சனங்களை பெற்று வருகிறது. நிச்சயம் இந்த படம் வசூல் அளவில் வெற்றி பெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த நிலையில் விஜய் நடித்துவரும் அடுத்த திரைப்படமான ’தளபதி 68’ படத்தின் படப்பிடிப்பு கடந்த சில நாட்களாக நடைபெற்று வருகிறது. இருப்பினும் இந்த படத்தின் பூஜை புகைப்படங்கள் உட்பட எந்த விதமான அப்டேட்டும் வெளியாகவில்லை. ‘லியோ’ படத்தின் ரிலீஸ்க்கு பின்னரே ’தளபதி 68’ படத்தின் அறிவிப்புகள் வரும் என்றும் படக்குழுவினர் ஏற்கனவே தெரிவித்திருந்தனர் என்பதை பார்த்தோம்.

இந்த நிலையில் இன்று ‘லியோ’ திரைப்படம் ரிலீஸ் ஆனதை அடுத்து இயக்குனர் வெங்கட் பிரபு தனது சமூக வலைத்தளத்தில் ஃபயர் எமோஜிகளை பதிவு செய்துள்ளார். இதற்கு பதில் அளித்துள்ள ’தளபதி 68’ படத்தின் தயாரிப்பாளர் அர்ச்சனா கல்பாத்தி வெங்கட் பிரபுவிடம், ‘நாம் இனிமேல் ஸ்டார்ட் பண்ண வேண்டியது தான்’ என்று தெரிவித்துள்ளார்.

இதையடுத்து விரைவில் ’தளபதி 68’ படத்தின் அறிவிப்புகள் ஒவ்வொன்றாக வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

More News

கண்ணாடியை உடைத்து ஒரே களேபரம்.. பிக்பாஸ் டாஸ்க்கில் விபரீதம்..!

பிக் பாஸ் நிகழ்ச்சி கடந்த சில நாட்களாக விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில்  இன்று போட்டியாளர்களுக்கு கொடுத்த டாஸ்கின் போது கண்ணாடி உடைந்ததால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

'லியோ' முதல் காட்சியில் மாலை மாற்றி திருமணம் செய்து கொண்ட காதல் ஜோடி..!

தளபதி விஜய் நடித்த 'லியோ' திரைப்படம் இன்று வெளியாகி பாசிட்டிவ் விமர்சனங்களை பெற்று வரும் நிலையில், இந்த படம் திரையிட்ட தியேட்டரில் காதல் ஜோடி மாலை மாற்றி திருமணம் செய்து கொண்ட புகைப்படம் இணையத்தில்

இந்தியாவை தோற்கடித்தால் என்னுடன் சாப்பிடலாம்.. வங்கதேச வீரர்களுக்கு பிரபல நடிகையின் அறிவிப்பு..!

இன்று நடைபெறும் இந்தியா மற்றும் வங்கதேச அணிகளுக்கு இடையிலான உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டியில் இந்தியாவை வங்கதேச அணி தோற்கடித்தால் வங்கதேச வீரர்கள் என்னுடன் அமர்ந்து

'லியோ' LCU படமா? படம் பார்த்தவர்கள் சொன்னது என்ன?

தளபதி விஜய் நடித்த 'லியோ' திரைப்படம் இன்று உலகம் முழுவதும் திரையரங்குகளில் பிரம்மாண்டமாக வெளியாகி இருக்கும் நிலையில் இந்த படம் LCU படமா என்பது குறித்து படம் பார்த்த ரசிகர்கள்

சந்தானம் அடுத்த படத்தின் டைட்டிலுடன் கூடிய ஃபர்ஸ்ட்லுக் போஸ்டர்.. 

நடிகர் சந்தானம் நடித்துவரும் திரைப்படங்களில் ஒன்றின் டைட்டில் மற்றும் பர்ஸ்ட்லுக் போஸ்டர் வெளியாகி இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.