'லியோ' ரிலீஸ் ஆயிருச்சு.. நாம ஸ்டார்ட் பண்ண வேண்டியதுதான்: அர்ச்சனா கல்பாதி ட்விட்..!


Send us your feedback to audioarticles@vaarta.com


தளபதி விஜய் நடித்த ‘லியோ’ திரைப்படம் இன்று திரையரங்குகளில் பிரமாண்டமாக வெளியாகி பெரும்பாலான ஊடகங்களில் பாசிட்டிவ் விமர்சனங்களை பெற்று வருகிறது. நிச்சயம் இந்த படம் வசூல் அளவில் வெற்றி பெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த நிலையில் விஜய் நடித்துவரும் அடுத்த திரைப்படமான ’தளபதி 68’ படத்தின் படப்பிடிப்பு கடந்த சில நாட்களாக நடைபெற்று வருகிறது. இருப்பினும் இந்த படத்தின் பூஜை புகைப்படங்கள் உட்பட எந்த விதமான அப்டேட்டும் வெளியாகவில்லை. ‘லியோ’ படத்தின் ரிலீஸ்க்கு பின்னரே ’தளபதி 68’ படத்தின் அறிவிப்புகள் வரும் என்றும் படக்குழுவினர் ஏற்கனவே தெரிவித்திருந்தனர் என்பதை பார்த்தோம்.
இந்த நிலையில் இன்று ‘லியோ’ திரைப்படம் ரிலீஸ் ஆனதை அடுத்து இயக்குனர் வெங்கட் பிரபு தனது சமூக வலைத்தளத்தில் ஃபயர் எமோஜிகளை பதிவு செய்துள்ளார். இதற்கு பதில் அளித்துள்ள ’தளபதி 68’ படத்தின் தயாரிப்பாளர் அர்ச்சனா கல்பாத்தி வெங்கட் பிரபுவிடம், ‘நாம் இனிமேல் ஸ்டார்ட் பண்ண வேண்டியது தான்’ என்று தெரிவித்துள்ளார்.
இதையடுத்து விரைவில் ’தளபதி 68’ படத்தின் அறிவிப்புகள் ஒவ்வொன்றாக வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
We need to start @vp_offl 🔥🤩🤩 https://t.co/hS1ag4emaP
— Archana Kalpathi (@archanakalpathi) October 19, 2023
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
-
Aadhira Palani
Contact at support@indiaglitz.com
Comments