close
Choose your channels

சிஎஸ்கே ரசிகர்களை குஷிப்படுத்தும் டைட்டில்.. 'தளபதி 68' படத்தின் மாஸ் தகவல்..!

Monday, June 5, 2023 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

தளபதி விஜய் நடிப்பில், இயக்குனர் வெங்கட் பிரபு இயக்கத்தில், ஏஜிஎஸ் நிறுவனத்தின் தயாரிப்பில், அனிருத் இசையில் உருவாக இருக்கும் திரைப்படம் ’தளபதி 68’. இந்த படத்தின் அறிவிப்பு சமீபத்தில் வெளியான நிலையில் அறிவிப்பு வெளியானதிலிருந்து இந்த படத்திற்கு மிகப்பெரிய எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் ’தளபதி 68’ படத்தின் டைட்டில் குறித்த தகவல் தற்போது இணையதளங்களில் கசிந்துள்ளது. இந்த படத்திற்கு ’சிஎஸ்கே’ என்ற டைட்டில் வைக்க இயக்குனர் வெங்கட் பிரபு திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது. ஏற்கனவே கிரிக்கெட் விளையாட்டில் மிகுந்த ஆர்வம் உள்ளவர் வெங்கட் பிரபு என்பதும் குறிப்பாக சிஎஸ்கே அணியின் வெறித்தனமான ஆதரவாளர் என்பதும் தெரிந்ததே. அதேபோல் விஜய் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்னர் சிஎஸ்கே அணியின் பிராண்ட் அம்பாசிடராக இருந்தவர் விஜய் என்பது குறிப்பிடத்தக்கது.

அந்த வகையில் சிஎஸ்கே என்ற டைட்டில் ’தளபதி 68’ படத்திற்கு வைப்பது உறுதி செய்யப்பட்டால் விஜய் ரசிகர்கள் மட்டுமின்றி சிஎஸ்கே ரசிகர்களும் மகிழ்ச்சி அடைவார்கள் என்பது குறிப்பிடத்தக்கது. விஜய் பிறந்த நாளான ஜூன் 22ஆம் தேதி இந்த படத்தின் டைட்டில் வெளியாகுமா? என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.