மாஸ்டர் ஆடியோ விழாவில் 'தல' குறித்து 'தளபதி' பேசியது என்ன?

  • IndiaGlitz, [Sunday,March 15 2020]

இன்று விஜய்யின் ‘மாஸ்டர்’ ஆடியோ விழாவில் கலந்து கொள்ள வந்த விஜய், கோட், சூட் அணிந்திருந்தார். இதுகுறித்து அவர் கூறியபோது, ‘என்னுடைய காஸ்டியூம் டிசைனர் பல்லவி அவர்கள் தான் இந்த காஸ்ட்யூமுக்கு காரணம். நான் அனைத்து ஆடியோ விழாவிலும் சரியாக டிரஸ் செய்வதில்லை என்று கூறி அவர்தான் இந்த கோட், சூட்டை ஏற்பாடு செய்தார். சரி நம்ம நண்பர் தல அஜித் மாதிரி நாமும் கோட், சூட் போடுவோமே என்று இந்த விழாவுக்கு கோட், சூட் அணிந்து கொண்டு வந்தேன்’ என்று கூறிவிட்டு ‘இது எனக்கு செட் ஆகிறதா? என்ற கேள்வியையும் அவர் தொகுப்பாளரிடம் கேட்டார்.

தல அஜித் என்று விஜய் கூறியவுடன் அரங்கத்தில் கைதட்டலும் கரகோஷமும் விண்ணை பிளந்தது. இந்த கரகோஷம் சில நிமிடங்கள் நீடித்தது என்பது குறிப்பிடத்தக்கது. விஜய் படத்தின் விழாவில் விஜய்யே தல அஜித் குறித்து பேசியது அஜித் ரசிகர்களுக்கு நிச்சயம் ஒரு இன்ப அதிர்ச்சியாகத்தான் இருக்கும்.

மேலும் தனது வீட்டில் ரெய்டு நடந்தபோதும், படப்பிடிப்பில் பிரச்சனை ஏற்பட்டபோதும் ரசிகர்கள் கொடுத்த ஆதரவு குறித்து அவர் கூறியபோது, ’என்னுடைய வாழ்வில் மறக்க முடியாத ஒரு அனுபவம் என்பது எனக்காக ஆதரவு கொடுத்த என்னுடைய ரசிகர்கள். அவர்கள் உண்மையில் வேற லெவல் என்று கூறினார். மேலும் இருபது வருடங்களுக்கு முன்னர் நான் மிகவும் அமைதியாக இருந்தேன். ரெய்டு போன்ற எந்த பிரச்சனையும் இல்லை. இப்பொழுதும் எனக்கு எந்த பிரச்சினையும் இல்லை. நான் அமைதியாக தான் இருக்கின்றேன், ஜாலியாக தான் இருக்கிறேன் என்று கூறினார்.

More News

மாஸ்டர்' ஆடியோ விழாவில் விஜய் கூறிய குட்டிக்கதை!

தளபதி விஜய் நடித்த 'மாஸ்டர்' படத்தின் இசை வெளியீட்டு விழாவில் தளபதி விஜய் கூறிய குட்டிக்கதை குறித்து தற்போது பார்ப்போம்: அவர் கூறியதாவது

விஜய்சேதுபதி நினைத்தால் இந்த படத்தை தவிர்த்து இருக்கலாம்: விஜய் 

தளபதி விஜய் நடித்த 'மாஸ்டர்' படத்தின் இசை வெளியீட்டு விழாவில் விஜய்சேதுபதி குறித்து தளபதி விஜய் பேசியதாவது:

மாஸ்டர் விழவை நான் அரைமனதுடன் தான் ஒப்புக்கொண்டேன்: விஜய்

அனைவரும் எதிர்பார்த்த 'மாஸ்டர்' திரைப்படத்தில் விஜய் பேசிய மாஸ் பேச்சை தற்போது பார்ப்போம்:

நான் விஜய்சேதுபதிக்கு கதையே சொல்லவில்லை: லோகேஷ் கனகராஜ்

தளபதி விஜய் நடித்த 'மாஸ்டர்' படத்தின் இயக்குனர் லோகேஷ் கனகராஜ், இந்த படத்தின் இசை வெளியீட்டு விழாவில் பேசியதாவது:

விஜய் நடிக்கவில்லை, நடித்தால் என்னிடம் மாட்டியிருப்பார்: விஜய்சேதுபதி

விஜய் போன்ற ஒரு மாஸ் ஹீரோவுடன் நடிக்க எனக்கு வாய்ப்பு கிடைத்ததை நான் எதிர்பார்க்கவே இல்லை. இந்த படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் ரிலீஸ்