தளபதி விஜய் வாங்கிய முதல் எலக்ட்ரிக் மாடல் கார்.. விலை இத்தனை கோடியா?

  • IndiaGlitz, [Monday,January 22 2024]

தளபதி விஜய் ஏற்கனவே சில விலை உயர்ந்த ஆடம்பர கார்கள் வைத்திருக்கும் நிலையில் தற்போது புதிய மாடல் பி.எம்.டபிள்யூ கார் வாங்கி இருப்பதாகவும் இந்த காரின் மதிப்பு 2 கோடிக்கு மேல் என்றும் கூறப்படுகிறது.

தளபதி விஜய் ஏற்கனவே ரோல்ஸ் ராய்ஸ் கோஸ்ட், மினி கூப்பர் எஸ், ஆடி ஏ8 உட்பட சில வெளிநாட்டு கார்கள் வைத்திருக்கிறார். கார்கள் வாங்குவதில் அலாதி பிரியம் உடைய விஜய் தற்போது புதிய BMW i7 xDrive 60 என்ற எலெக்ட்ரிக் காரை வாங்கி உள்ளதாக தெரிகிறது. இந்த காரின் புகைப்படம் இணையத்தில் வைரல் ஆகி வருகிறது. மேலும் விஜய் வாங்கிய முதல் எலக்ட்ரிக் கார் மாடல் இதுதான் என்பதும் இந்த காரை தான் இனி அவர் அதிகம் பயன்படுத்துவார் என்று கூறப்படுகிறது.

குறிப்பாக தளபதி விஜய் அரசியலில் விரைவில் களமிறங்க இருப்பதாக கூறப்படும் நிலையில் அரசியல் சுற்றுப்பயணங்களுக்கு அவர் இந்த காரை பயன்படுத்திவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்தியாவில் இந்த கார்கள் வெகு சிலரிடம் மட்டுமே இருக்கும் நிலையில் அந்த பட்டியலில் தற்போது விஜய்யும் இணைந்து இருக்கிறார்.

தளபதி விஜய் தற்போது ’கோட்’ என்ற திரைப்படத்தில் நடித்து வரும் நிலையில் இந்த படத்தை முடித்துவிட்டு அவர் முழுமையாக அரசியலில் இறங்குவார் என்றும் இரண்டு ஆண்டுகள் அவர் படங்களில் நடிக்க மாட்டார் என்றும் கூறப்படுகிறது. இருப்பினும் இந்த தகவல் விஜய் தரப்பிலிருந்து உறுதி செய்யப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

More News

'குஷி' விஜய் போல் ரிஸ்க் எடுத்த காமெடி நடிகர் அம்பானி சங்கர்: வைரல் வீடியோ

எஸ்ஜே சூர்யா இயக்கத்தில் விஜய், ஜோதிகா நடித்த 'குஷி' திரைப்படத்தில் விஜய் ரிஸ்க் எடுத்து நடித்த ஒரு காட்சியை போல காமெடி நடிகர் அம்பானி சங்கர் வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

ராமர் கோவில் திறப்பு தினத்தில் சமுத்திரக்கனி செய்யும் செயல்.. நெட்டிசன்களின் ரியாக்சன்..!

அயோத்தியில் கட்டப்பட்டுள்ள ராமர் கோவில் நாளை திறக்கப்பட உள்ள நிலையில் நாளை தனது அடுத்த படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியிட இருப்பதாக நடிகர் மற்றும் இயக்குனர் சமுத்திரக்கனி தெரிவித்துள்ளார்.

அட்ஜெஸ்ட்மெண்ட் கேட்டால் முத்தம் மட்டும் தருவேன்: தமிழ் நடிகையின் அதிர்ச்சி பேட்டி..!

அட்ஜெஸ்ட்மெண்ட் செய்ய வேண்டும் என்று யாராவது கேட்டால் முத்தம் மட்டுமே கொடுப்பேன் என தமிழ் நடிகை ஒருவர் சமீபத்தில் அளித்த பேட்டியில் கூறி இருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

என் பேரு மீனாகுமாரி.. 38 வயது முமைத் கானை கட்டி பிடித்திருக்கும் நபர் யார்?

விக்ரம் நடித்த 'கந்தசாமி' என்ற திரைப்படத்தில் 'என் பேரு மீனா குமாரி' என்ற பாடலுக்கு நடனமாடிய முமைத்கான் தற்போது 38 வயதில் இருக்கும் நிலையில் அவர் தனது தோழியை கட்டிப் பிடித்தவாறு

நாயகிக்கு முக்கியத்துவம் உள்ள படத்தை தயாரிக்கும் லைகா.. 2 படங்கள் நடித்த நடிகைக்கு ஜாக்பாட்..!

தமிழ் திரையுலகில் 2 படங்கள் மட்டுமே நடித்த நடிகைக்கு, நாயகிக்கு முக்கியத்துவம் உள்ள படத்தில் நடிக்க வாய்ப்பு கிடைத்துள்ளது என்றும் அந்த படத்தை லைகா நிறுவனம் தயாரிக்க இருப்பதாகவும் தகவல் வெளியாகி