close
Choose your channels

தங்கைக்கு மாலை அணிவித்து வாழ்த்து கூறிய ஜேசன் சஞ்சய்.. க்யூட் வீடியோ..!

Thursday, June 1, 2023 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

தளபதி விஜய்யின் மகள் திவ்யாவுக்கு மாலை அணிவித்து அவரது சகோதரர் ஜேசன் சஞ்சய் வாழ்த்து தெரிவித்த வீடியோ தற்போது இணையதளங்களில் வைரல் ஆகி வருகின்றன.

தமிழ் திரையுலகின் மாஸ் நடிகர் தளபதி விஜய்க்கு ஜேசன் சஞ்சய் என்ற மகனும் திவ்யா என்ற மகளும் உள்ளனர் என்பது தெரிந்ததே. ஜேசன் சஞ்சய் ஏற்கனவே கனடாவில் திரைப்பட இயக்குனர் படிப்பை முடித்துவிட்டு குறும்படம் ஒன்றை இயக்கியுள்ளார். இவர் விரைவில் தமிழ் சினிமாவில் அடியெடுத்து வைப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த நிலையில் விஜய்யின் மகள் திவ்யா பள்ளி படிப்பை முடித்துள்ள நிலையில் அவருக்கு அவர் படித்த பள்ளியில் சான்றிதழ் கொடுத்துள்ளனர். இதற்கான விழாவில் அவரது பெயர் அழைக்கப்பட்டு அவருக்கு சான்றிதழ் கொடுத்த வீடியோவும் அதனை எடுத்து அந்த சான்றிதழை தனது சகோதரர் ஜேசன் சஞ்சய் இடம் கொடுத்து வாழ்த்து பெற்ற காட்சிகள் அந்த வீடியோவில் உள்ளன.

தனது தங்கைக்கு மாலை அணிவித்து ஜேசன் சஞ்சய் வாழ்த்து தெரிவித்த காட்சிகள் க்யூட் ஆக இருப்பதாக ரசிகர்கள் தெரிவித்துள்ளனர். இந்த நிலையில் பள்ளிப்படிப்பை முடித்து விட்ட திவ்யா அடுத்ததாக கல்லூரி படிப்பை அவரது சகோதரர் போலவே கனடாவில் படிப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.   

Comments

Welcome to IndiaGlitz comments! Please keep conversations courteous and relevant to the topic. To ensure productive and respectful discussions, you may see comments from our Community Managers, marked with an "IndiaGlitz Staff" label. For more details, refer to our community guidelines.
settings
Login to post comment
Cancel
Comment