'தளபதி 66' படத்தில் விஜய்க்கு ஜோடியாகும் வம்சியின் ராசியான நாயகி?

இயக்குனர் வம்சி இயக்கத்தில் உருவான சூப்பர்ஹிட் திரைப்படத்தில் நடித்த நடிகை தான் தளபதி விஜய்யின் 66வது படத்திலும் நாயகியாக போகிறார் என்ற தகவல் திரையுலகில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது .

தளபதி விஜய் நடிக்க இருக்கும் 66வது திரைப்படத்தை வம்சி இயக்க இருக்கிறார் என்பதும் இந்த படத்தின் ஆரம்பகட்ட பணிகள் தொடங்கி விட்டன என்பதும் தெரிந்ததே. இந்த படத்தில் ஏற்கனவே ராஷ்மிகா மந்தனா நாயகியாக நடிக்கவிருப்பதாக கிட்டத்தட்ட உறுதியான தகவல் வெளியான நிலையில் தற்போது திடீரென இந்த படத்தில் தமன்னா நடிக்க இருப்பதாக கூறப்படுகிறது.

வம்சி இயக்கத்தில் உருவான ’தோழா’ படத்தில் தமன்னா நடித்ததை அடுத்து இந்த படம் மிகப்பெரிய வெற்றி பெற்ற வெற்றி பெற்றது. இதனால் தனது ராசியான நடிகை தமன்னாவை ’தளபதி 66’ திரைப்படத்திலும் நடிக்க வைக்க இயக்குனர் வம்சி திட்டமிட்டுள்ளதாகவும் இது குறித்த அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்றும் கூறப்படுகிறது. நடிகை தமன்னா ஏற்கனவே விஜய்யுடன் ‘சுறா’ படத்தில் நடித்தவர் என்பது அனைவரும் அறிந்ததே.

ஏற்கனவே ராஷ்மிகா மந்தனா, சமந்தா, நயன் தாரா ஆகியோர் ‘தளபதி 66’ நாயகி பட்டியலில் இருந்த நிலையில் இந்த படத்தின் நாயகி தமன்னாவா? அல்லது வேறு நடிகையா? என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.

More News

ஜிவி பிரகாஷ் அடுத்த படத்தின் சென்சார் தகவல்!

ஜிவி பிரகாஷ் நடித்துள்ள அடுத்த படம் வரும் ஏப்ரல் 1ஆம் தேதி திரையரங்குகளில் ரிலீஸ் ஆக உள்ள நிலையில் இந்த படத்தின் சென்சார் தகவல் வெளியாகி உள்ளது

ஜாலியோ ஜிம்கானா: ஜாலியான புகைப்படத்தை பகிர்ந்த பூஜா ஹெக்டே!

விஜய் நடித்த 'பீஸ்ட்' திரைப்படத்தின் இரண்டு பாடல்கள் கடந்த சில நாட்களுக்கு முன் வெளியானது என்பதும் இரண்டு பாடல்களும் உலகம் முழுவதும் சூப்பர் ஹிட் ஆனது என்பதும் குறிப்பிடத்தக்கது

கொல்கத்தாவை விரட்டியடிக்க தல தோனியின் சிஷ்யன் தயார்

முதல் டாஸ் போடப்படுவதற்கு முன்பே பரபரப்பு பற்றிக்கொண்டுவிட்டது. தல தோனி கேப்டனாக நீடிப்பாரா என்ற சஸ்பென்ஸ் முடிவுக்கு வந்தது.

நீங்களும் Success மனிதராக மாறனுமா? இருக்க வேண்டிய முக்கியமான குணங்கள்!

மனிதராகப் பிறந்த எல்லோருக்குமே பெரிய பெரிய கனவுகளும் ஆசைகளும் இருக்கத்தான் செய்கின்றன. ஆனால் இந்தக்

ரஷ்ய அதிபர் புடினின் ரகசிய காதலி தலைமறைவா? வைரலாகும் புதுத் தகவல்!

ரஷ்யா, உக்ரைன் மீதான போர் நடவடிக்கையை தொடர்ந்து நடத்திவருகிறது.