'தளபதி 66' படத்தின் நாயகி இந்த மூவரில் ஒருவரா?

  • IndiaGlitz, [Wednesday,September 29 2021]

தளபதி விஜய் நடித்து வரும் ’பீஸ்ட்’ படத்தின் படப்பிடிப்பு ஒருபக்கம் நடந்து கொண்டிருக்கும் நிலையிலேயே இன்னொரு பக்கம் தளபதி விஜய் நடிக்க இருக்கும் 66ஆவது திரைப்படம் குறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்பு சமீபத்தில் வெளியானது. பிரபல தெலுங்கு தயாரிப்பாளர் தில் ராஜ் தயாரிப்பில், பிரபல தெலுங்கு இயக்குனர் வம்சி இயக்கத்தில் உருவாக இருக்கும் இந்த படம் குறித்த தகவல்களும் அவ்வப்போது இணையதளங்களில் இருந்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

குறிப்பாக ’தளபதி 66’ திரைப்படத்தின் நாயகி யார் என்ற கேள்வி ரசிகர் மத்தியில் எழுந்துள்ள நிலையில் இந்த படத்தில் மூவரில் ஒருவர் நாயகியாக நடிக்கலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. குறிப்பாக முதல் முறையாக விஜய்யின் படம் தெலுங்கில் நேரடியாக ரிலீஸ் ஆக இருப்பதால் பிரபல தெலுங்கு நடிகை ஒருவர் தான் நாயகியாகத் தேர்வு செய்யப்படுவார் என்று கூறப்படுகிறது.

’மாஸ்டர்’ மற்றும் ’பீஸ்ட்’ ஆகிய இரண்டு படங்களிலும் விஜய் ஜோடியாக ராஷ்மிகா மந்தனா நடிப்பார் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் அந்த இரண்டு படங்களையும் அவர் மிஸ் செய்த நிலையில் ’தளபதி 66’ திரைப்படத்தில் எப்படியும் விஜய்க்கு ஜோடியாக நடித்துவிட வேண்டும் என்பதற்காக அவர் தில் ராஜ் மற்றும் வம்சி ஆகியோர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக கூறப்படுகிறது.

அதேபோல் இன்னொரு பிரபல தெலுங்கு நடிகையான கியாரா அத்வானி, ’தளபதி 66’ படத்தின் நாயகி பட்டியல் இருக்கிறார் என்பதும், அதுமட்டுமின்றி தமிழ், தெலுங்கு திரையுலகில் பிரபலமாக இருக்கும் கீர்த்தி சுரேஷ் பெயரும் பரிசீலனையில் இருப்பதாக கூறப்படுகிறது. எனவே ராஷ்மிகா மந்தனா, கியாரா அத்வானி, கீர்த்தி சுரேஷ் ஆகிய மூவரில் ஒருவர்தான் இந்த படத்தின் நாயகியாக ஒப்பந்தம் செய்யப்பட வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது.

More News

பிக்பாஸ் நிகழ்ச்சியில் மேலும் மூன்று பிரபலங்கள்!

விஜய் டிவியில் பிக்பாஸ் நிகழ்ச்சி வரும் அக்டோபர் 3ஆம் தேதி பிரம்மாண்டமாக தொடங்கவிருக்கும் நிலையில் இந்த நிகழ்ச்சியில் பங்கேற்கும் போட்டியாளர்கள் குறித்த விவரங்களை அவ்வப்போது பார்த்து

கோலி கேப்டன் பதவியில் இருந்து விலகுவதற்கு தமிழக வீரர் அஸ்வின் காரணமா?

இந்தியக் கிரிக்கெட் அணியின் கேப்டன் விராட் கோலி மீது சரமாரியாக பல்வேறு தரப்புகளில் இருந்து விமர்சனங்கள்

அஜித்தின் 'வலிமை' படத்தில் டிக்டாக் பிரபலம்?

அஜித் நடித்த 'வலிமை' திரைப்படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து தற்போது போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது என்பதும், இந்த படத்தின் ரிலீஸ் தேதி வரும் பொங்கல் தினம்

சிவகார்த்திகேயனின் 'டாக்டர்': அனிருத்தின் அட்டகாசமான தீம் மியூசிக் வெளியீடு!

சிவகார்த்திகேயன் நடித்த 'டாக்டர்' திரைப்படம் வரும் அக்டோபர் 9ஆம் தேதி வெளியாக இருக்கும் நிலையில் இந்த படத்தின் புரமோஷன் பணிகள் சுறுசுறுப்பாக நடைபெற்று வருகிறது என்பது தெரிந்ததே

'தி எண்ட்' கார்டு போட்ட செல்வராகவன்: ரசிகர்களின் வேற லெவல் கமெண்ட்ஸ் 

பிரபல இயக்குனர் செல்வராகவன் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் 'தி எண்ட் என்று பதிவு செய்துள்ள நிலையில் அந்த பதிவு தற்போது மிகப்பெரிய அளவில் வைரலாகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது