'கோட்' படத்தின் கிளைமாக்ஸ் படப்பிடிப்பு எங்கே? ஆச்சரியமான தகவல்..!

  • IndiaGlitz, [Thursday,March 07 2024]

தளபதி விஜய் நடிக்கும் ’கோட்’ படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில் இந்த படத்தின் கிளைமாக்ஸ் இலங்கையில் உள்ள கிரிக்கெட் மைதானத்தில் நடத்த திட்டமிட்டு இருந்தது. ஆனால் தற்போது அதற்கு பதிலாக புதிய இடம் தேர்வு செய்யப்பட்டு விட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.

தளபதி விஜய் நடிப்பில், வெங்கட் பிரபு இயக்கத்தில், யுவன் சங்கர் ராஜா இசையில், ஏஜிஎஸ் நிறுவனத்தின் தயாரிப்பில் உருவாகி வரும் திரைப்படம் ’கோட்’. இந்த படத்தின் படப்பிடிப்பு கடந்த சில மாதங்களாக நடைபெற்று வரும் நிலையில் இந்த படத்தின் கிளைமாக்ஸ் காட்சியை இலங்கையில் உள்ள கிரிக்கெட் மைதானத்தில் நடத்த திட்டமிட்டிருந்தது. இதற்காக இயக்குனர் வெங்கட் பிரபு இலங்கை சென்று லொகேஷன் பார்த்து விட்டு வந்ததாகவும் கூறப்பட்டது.

இந்த நிலையில் விஜய், இலங்கை சென்றால் சில அரசியல் பிரச்சனைகள் ஏற்படும் என்றும் குறிப்பாக இலங்கை முன்னாள் அதிபர் ராஜபக்சேவின் மகன் விஜய்யை சந்திக்க வாய்ப்பு இருப்பதாகவும் அதனால் தமிழக அரசியலில் குழப்பம் ஏற்பட வாய்ப்பு இருப்பதாக கூறப்பட்டது.

இதையடுத்து இலங்கை படப்பிடிப்பு ரத்து செய்யப்பட்டதாக கூறப்பட்ட நிலையில் தற்போது திருவனந்தபுரத்தில் உள்ள சர்வதேச கிரீன்ஃபீல்ட் மைதானத்தில் ’கோட்’ படத்தின் கிளைமாக்ஸ் படப்பிடிப்பை நடத்த திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது.

விஜய், பிரபுதேவா, பிரசாந்த், மோகன், சினேகா, லைலா, மீனாட்சி சவுத்ரி, பிரேம்ஜி, கனிகா என ஏராளமான நட்சத்திரங்கள் இந்த படத்தில் நடித்து வருகின்றனர்.

More News

இந்தியாவில் குழந்தைகள் சந்திக்கும் பாலியல் பிரச்சனைகள்.. அதிர்ச்சி தகவலை கூறிய யுவன்ஷங்கர் ராஜா..!

புதுச்சேரியில் 9 வயது சிறுமி 4 கொடூர நபர்களால் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்திய நிலையில் இதற்கு கமல்ஹாசன், பார்த்திபன் உட்பட பல்வேறு

பாராளுமன்ற தேர்தலில் சரத்குமார், ராதிகா இருவருமே போட்டியா? எந்த தொகுதியில்?

வரும் பாராளுமன்ற தேர்தலில் ஏற்கனவே சில திரை உலக நட்சத்திரங்கள் போட்டியிடுவார்கள் என்று கூறப்பட்ட நிலையில் தற்போது சரத்குமார் மற்றும் அவரது மனைவி ராதிகா ஆகிய இருவருமே

ஆன்மீக Glitz-ல் Dr.Sudha Seshayyan அவர்களுடன் மகா சிவராத்திரி: அரிய ரகசியங்கள் அலசல்!

மகா சிவராத்திரி பற்றி நீங்கள் அறிந்திராத அரிய தகவல்களை Dr.Sudha Seshayyan அவர்கள் ஆன்மீக Glitz சேனலில் பகிர்ந்து கொள்கிறார்.

மகா சிவராத்திரி: ஈசனை அடைய ஒரே வழி? விரதம், பலன்கள், ரகசியங்கள்!

மகா சிவ ராத்திரி - இந்துக்களின் முக்கிய பண்டிகைகளில் ஒன்று. இந்த புனித நாளில், பக்தர்கள் இறைவன் சிவனை வழிபட்டு, அவரது அருளைப் பெறுகின்றனர்.

விக்ரமின் 'சியான் 62' படத்தில் இணைந்த பிரபலம்.. அதிகாரபூர்வ அறிவிப்பு..!

விக்ரம் நடித்து முடித்துள்ள 'துருவ நட்சத்திரம்' மற்றும் 'தங்கலான்' ஆகிய திரைப்படங்கள் விரைவில் வெளியாக இருக்கும் நிலையில் அவரது அடுத்த படத்தை அதாவது 'சியான் 62' படத்தை 'சித்தா'