விஜய்யின் 'வாரிசு' படம் குறித்து சூப்பர் அப்டேட் கொடுத்த தமன்!

தளபதி விஜய் நடித்து வரும் ‘வாரிசு’ திரைப்படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில் இந்த படத்தின் சூப்பர் அப்டேட் ஒன்றை இசையமைப்பாளர் தமன் தனது சமூக வலைத்தளத்தில் தெரிவித்துள்ளார்.

தளபதி விஜய் நடிப்பில், வம்சி இயக்கத்தில், தில் ராஜூ தயாரிப்பில் உருவாகி வரும் திரைப்படம் ‘வாரிசு’. இந்த படத்தில் விஜய்க்கு ஜோடியாக ராஷ்மிகா மந்தனா நடித்து வருகிறார் என்றும் மேலும் சரத்குமார், பிரகாஷ்ராஜ், ஜெயசுதா, பிரபு உள்ளிட்ட பலர் நடித்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் இந்த படத்தின் இசையமைப்பாளர் தமன் தனது சமூக வலைத்தளத்தில் ‘வாரிசு’ படத்தில் கம்போசிங் பணியைத் தொடங்கிவிட்டதாக குறிப்பிட்டு இயக்குனர் வம்சி மற்றும் பாடலாசிரியர் விவேக் ஆகியோர்களுடன் எடுத்த புகைப்படத்தை பதிவு செய்துள்ளார். இதனையடுத்து இந்த படத்தில் விவேக் பாடல் எழுதுவது உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்த சூப்பர் அப்டேட்டால் விஜய் ரசிகர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

நீண்ட இடைவெளிக்கு பிறகு குடும்ப சென்டிமென்ட் கதையில் விஜய் நடிப்பதால் இந்த படத்திற்கு மிகப்பெரிய எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது என்பதும், முக்கியமாக இந்த படத்தின் பாடல்கள் மிகப் பெரிய அளவில் முக்கியத்துவம் பெறும் என்றும் கூறப்படுகிறது.

More News

இது உண்மையில்லை, ஆனா கேட்கவும் பாக்கவும் நல்லாயிருக்கு: பிக்பாஸ் டைட்டில் வின்னர் ராஜூ!

'இது உண்மை இல்லை ஆனால் கேட்கவும் பார்க்கவும் நல்லா இருக்கு' என பிக்பாஸ் டைட்டில் வின்னர் ராஜூ ஜெயமோகன் தனது டுவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார். 

பிரபல தமிழ் ஹீரோவுக்கு திருமணம்: மணப்பெண் யார் தெரியுமா?

பிரபல தமிழ் ஹீரோவும் பிக்பாஸ் நிகழ்ச்சியின் போட்டியாளர்களின் ஒருவருமான ஹரிஷ் கல்யாண் திருமணம் விரைவில் நடக்க இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. 

ஹனிமூனில் இருந்து திரும்பியதும் உதயநிதிக்கு வாழ்த்து கூறிய விக்னேஷ் சிவன்: இதுதான் காரணம்!

லேடி சூப்பர்ஸ்டார் நயன்தாராவை சமீபத்தில் திருமணம் செய்த இயக்குனர் விக்னேஷ் சிவன், தாய்லாந்து நாட்டிற்கு ஹனிமூன் சென்று இருந்தார் என்பதும் சமீபத்தில் அவர் ஹனிமூனை

நாடக நடிகர் 'பூ' ராமு காலமானார்: திரையுலகினர் இரங்கல்!

நாடக நடிகரும் சசி இயக்கத்தில் உருவான 'பூ' உள்பட ஒருசில படங்களில் நடித்தவருமான ராமு நேற்று மாரடைப்பு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்ற நிலையில் அவர் காலமானதாக

மற்றொரு மாஸ் நடிகர் படத்தின் உரிமையை பெற்ற ரெட் ஜெயண்ட் மூவீஸ்: அதிகாரபூர்வ அறிவிப்பு

உதயநிதி ஸ்டாலினின் ரெட் ஜெயன்ட் மூவிஸ் நிறுவனம் கடந்த சில மாதங்களாக மாஸ் நடிகர்களின் படங்களை தொடர்ச்சியாக ரிலீஸ் செய்து வருகிறது என்பதை பார்த்து வருகிறோம்.