close
Choose your channels

விஜய்யின் 'வாரிசு' படம் குறித்து சூப்பர் அப்டேட் கொடுத்த தமன்!

Tuesday, June 28, 2022 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

தளபதி விஜய் நடித்து வரும் ‘வாரிசு’ திரைப்படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில் இந்த படத்தின் சூப்பர் அப்டேட் ஒன்றை இசையமைப்பாளர் தமன் தனது சமூக வலைத்தளத்தில் தெரிவித்துள்ளார்.

தளபதி விஜய் நடிப்பில், வம்சி இயக்கத்தில், தில் ராஜூ தயாரிப்பில் உருவாகி வரும் திரைப்படம் ‘வாரிசு’. இந்த படத்தில் விஜய்க்கு ஜோடியாக ராஷ்மிகா மந்தனா நடித்து வருகிறார் என்றும் மேலும் சரத்குமார், பிரகாஷ்ராஜ், ஜெயசுதா, பிரபு உள்ளிட்ட பலர் நடித்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் இந்த படத்தின் இசையமைப்பாளர் தமன் தனது சமூக வலைத்தளத்தில் ‘வாரிசு’ படத்தில் கம்போசிங் பணியைத் தொடங்கிவிட்டதாக குறிப்பிட்டு இயக்குனர் வம்சி மற்றும் பாடலாசிரியர் விவேக் ஆகியோர்களுடன் எடுத்த புகைப்படத்தை பதிவு செய்துள்ளார். இதனையடுத்து இந்த படத்தில் விவேக் பாடல் எழுதுவது உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்த சூப்பர் அப்டேட்டால் விஜய் ரசிகர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

நீண்ட இடைவெளிக்கு பிறகு குடும்ப சென்டிமென்ட் கதையில் விஜய் நடிப்பதால் இந்த படத்திற்கு மிகப்பெரிய எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது என்பதும், முக்கியமாக இந்த படத்தின் பாடல்கள் மிகப் பெரிய அளவில் முக்கியத்துவம் பெறும் என்றும் கூறப்படுகிறது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.   

Comments

Login to post comment
Cancel
Comment