'வாரிசு' இசை வெளியீட்டு விழா: விஜய் கூறிய ஹேஷ்டேக்

தளபதி விஜய்யின் நடித்த ’வாரிசு’ திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா நேற்று நடந்த நிலையில் வழக்கம்போல் குட்டி கதை, என் நெஞ்சில் குடியிருக்கும் ரசிகர்கள் உள்பட அந்த விழாவை கலகலப்பாக்கிய விஜய், ரஞ்சிதமே பாடலை பாடியதோடு டான்ஸ் ஆடினார்.

இந்த நிலையில் இந்த நிகழ்ச்சியை தொகுத்து வழங்கிய பிக் பாஸ் டைட்டில் வின்னர் ராஜு இந்த நிகழ்ச்சியின் ஞாபகார்த்தமாக நீங்கள் ஒரு செல்பி எடுத்து உங்கள் ட்விட்டர் பக்கத்தில் வெளியிட வேண்டும் என்று கூறினார்.

உடனே அவர் ராஜூவின் செல்போனை வாங்கி ரசிகர்களுடன் செல்பி வீடியோ எடுத்தார். அதன்பிறகு தனது அட்மின் ஜெகதீஷை அழைத்து இந்த செல்பி வீடியோவை ’என் நெஞ்சில் குடியிருக்கும்’ என்ற ஹேஷ்டேக்குடன் டுவிட்டர் பக்கத்தில் வெளியிடுங்கள் என்று கூறியதை அடுத்து ஜெகதீஷ் அந்த வீடியோவை உடனே விஜய்யின் டுவிட்டரில் வெளியிட்டார்.

இந்த நிகழ்ச்சிக்கு பிறகு என் நெஞ்சில் குடியிருக்கும் என்ற ஹேஷ்டேக் உலக அளவில் டிரெண்ட் ஆனது என்பது குறிப்பிடத்தக்கது.

More News

இனிமேல் ரசிகர்களுக்கு இந்த ஸ்டைல் முத்தம் தான்: மேடையிலேயே முத்தம் கொடுத்த விஜய்!

தளபதி விஜய்யின் 'வாரிசு' திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா நேற்று நடந்த நிலையில் இந்த விழாவில் ஏராளமான ரசிகர்கள் கூடி இருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது. 

'வாரிசு' இசை வெளியீட்டு விழா: தனது போட்டியாளர் யார் என பகிரங்கமாக அறிவித்த விஜய்!

தளபதி விஜய் நடித்த 'வாரிசு' திரைப்படம் வரும் பொங்கல் தினத்தில் பிரம்மாண்டமாக வெளியாகவிருக்கும் நிலையில் இந்த படத்தின் இசை வெளியீட்டு விழா நேற்று சென்னையில் நடந்தது. 

கேர்ள் ப்ரண்ட் உடன் விஜய் பார்த்த திரைப்படம்

தளபதி விஜய் நடித்த 'வாரிசு' திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா நேற்று நடந்த நிலையில் சுமார் அரை மணி நேரம் விஜய் பேசிய கலகலப்பான பேச்சு ரசிகர்கள் மத்தியில் பெரும் திருப்தியை ஏற்படுத்தியது. 

'வாரிசு' இசை வெளியீட்டு விழா: விஜய் கூறிய குட்டிக்கதை!

தளபதி விஜய் நடித்த 'வாரிசு' திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா நேற்று சென்னையில் பிரமாண்டமாக நடந்த நிலையில் இதில் விஜய் வழக்கம்போல் குட்டிக்கதை கூறினார்

விஜய்சேதுபதி-காத்ரீனா கைப் படத்தின் புதிய அப்டேட்!

மக்கள் செல்வன் விஜய் சேதுபதி மற்றும் பிரபல பாலிவுட் நடிகை காத்ரீனா கைப் ஆகிய இருவரும் இணைந்து நடித்து வரும் திரைப்படம் 'மெர்ரி கிறிஸ்மஸ்'. இந்த படத்தை ஸ்ரீராம் என்பவர் இயக்கி வருகிறார்