close
Choose your channels

'வாரிசு' இசை வெளியீட்டு விழா: விஜய் கூறிய ஹேஷ்டேக்

Sunday, December 25, 2022 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

தளபதி விஜய்யின் நடித்த ’வாரிசு’ திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா நேற்று நடந்த நிலையில் வழக்கம்போல் குட்டி கதை, என் நெஞ்சில் குடியிருக்கும் ரசிகர்கள் உள்பட அந்த விழாவை கலகலப்பாக்கிய விஜய், ரஞ்சிதமே பாடலை பாடியதோடு டான்ஸ் ஆடினார்.

இந்த நிலையில் இந்த நிகழ்ச்சியை தொகுத்து வழங்கிய பிக் பாஸ் டைட்டில் வின்னர் ராஜு இந்த நிகழ்ச்சியின் ஞாபகார்த்தமாக நீங்கள் ஒரு செல்பி எடுத்து உங்கள் ட்விட்டர் பக்கத்தில் வெளியிட வேண்டும் என்று கூறினார்.

உடனே அவர் ராஜூவின் செல்போனை வாங்கி ரசிகர்களுடன் செல்பி வீடியோ எடுத்தார். அதன்பிறகு தனது அட்மின் ஜெகதீஷை அழைத்து இந்த செல்பி வீடியோவை ’என் நெஞ்சில் குடியிருக்கும்’ என்ற ஹேஷ்டேக்குடன் டுவிட்டர் பக்கத்தில் வெளியிடுங்கள் என்று கூறியதை அடுத்து ஜெகதீஷ் அந்த வீடியோவை உடனே விஜய்யின் டுவிட்டரில் வெளியிட்டார்.

இந்த நிகழ்ச்சிக்கு பிறகு என் நெஞ்சில் குடியிருக்கும் என்ற ஹேஷ்டேக் உலக அளவில் டிரெண்ட் ஆனது என்பது குறிப்பிடத்தக்கது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.