close
Choose your channels

இந்த முறை கல்வி விழாவில் வேற லெவல் திட்டம் வைத்திருக்கும் தளபதி விஜய்.. தவெக நிர்வாகிகள்..!

Sunday, May 19, 2024 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

தளபதி விஜய் கடந்தாண்டு 10ஆம் வகுப்பு மற்றும் 12ஆம் வகுப்பு தேர்வில் முதல் மூன்று இடம் பிடித்த ஒவ்வொரு மாவட்டத்தை சேர்ந்த மாணவ மாணவிகளை நேரில் அழைத்து சிறப்பு பரிசு கொடுத்தார் என்பதும் பல மணி நேரம் அவரே நின்று ஓய்வு எடுக்காமல் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டது அனைவரையும் ஆச்சரியப்படுத்தியது என்பதையும் பார்த்தோம்.

இந்த நிலையில் இந்த ஆண்டு அவர் அரசியல் தலைவராகவும் மாறி உள்ள நிலையில் தமிழக வெற்றி கழகத்தின் சார்பில் கல்வி விழா நடத்தப்படும் என்றும் அதற்கான ஏற்பாடுகள் நடைபெற்று வருவதாகவும் அவரது கட்சியின் தொண்டர்கள் நிர்வாகிகள் தெரிவித்துள்ளனர்.

ஒவ்வொரு மாவட்டத்திலும் 10ஆம் வகுப்பு மற்றும் 12ம் வகுப்பு பொது தேர்வில் முதல் மூன்று இடங்களை பிடித்த மாணவர்களை தேர்வு செய்து வருகிறோம் என்றும் ஒரே மதிப்பெண்களை இரண்டு அல்லது அதற்கு மேற்பட்ட மாணவர்கள் பெற்றிருந்தால் தமிழில் யார் அதிக மதிப்பெண் எடுத்திருக்கிறார்களோ அவர்களை தேர்வு செய்து பரிசு வழங்க இருப்பதாகவும் தமிழக வெற்றி கழகத் தொண்டர்கள் தெரிவித்துள்ளனர்.

மேலும் இந்த ஆண்டு தளபதி விஜய் புதிய திட்டம் வைத்திருப்பதாகவும் முதல் மூன்று இடங்களை பிடித்த மாணவ மாணவிகளுக்கு மட்டும் இன்றி ஏழ்மை நிலையில் உள்ள மாணவ மாணவிகளுக்கு அவர்களது உயர் கல்விக்கு உதவி செய்யும் திட்டத்தை அறிவிக்க போவதாகவும் அதுமட்டுமின்றி திருநங்கை மாணவ மாணவிகளுக்கும் இந்த முறை பரிசளிக்க இருப்பதாகவும் தமிழக வெற்றி கழகத் தொண்டர்கள் தெரிவித்துள்ளனர்.

தற்போது 'கோட்’ படத்தின் தொழில்நுட்ப பணிகள் தொடங்க இருப்பதால் ஜூலை மாதம் இந்த விழா நடக்கும் என்றும் விரைவில் இந்த விழா நடக்கும் தேதி மற்றும் இடம் குறித்த அறிவிப்பு வெளியாகும் என்றும் கூறப்படுகிறது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.