close
Choose your channels

'தளபதி 68' படத்தில் 80களின் சூப்பர் ஹிட் பட ஹீரோ? ஆச்சரிய தகவல்..!

Monday, October 2, 2023 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

தளபதி விஜய் நடிக்கும் ’தளபதி 68’ படத்தின் பூஜை இன்று நடைபெற இருப்பதாகவும் நாளை முதல் படப்பிடிப்பு தொடங்க இருப்பதாகவும் கூறப்படும் நிலையில் இந்த படத்தில் 80களின் சூப்பர் ஹிட் படங்களை கொடுத்த ஹீரோ இணைய உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

தளபதி விஜய் நடிப்பில், வெங்கட் பிரபு இயக்கத்தில், யுவன் சங்கர் ராஜா இசையில் உருவாக இருக்கும் திரைப்படம் ’தளபதி 68’. இந்த படத்தில் நடிக்கும் நட்சத்திரங்களின் தகவல்கள் ஏற்கனவே வெளியானது என்பதை பார்த்தோம்.

இந்த படத்தில் விஜய்யுடன் த்ரிஷா, பிரியங்கா மோகன், மீனாட்சி சவுத்ரி, அரவிந்த்சாமி, வெங்கட் பிரபு உள்ளிட்ட பலர் நடிக்க இருப்பதாக கூறப்பட்டது. இந்த நிலையில் தற்போது இந்த படத்தில் 80களில் பல சூப்பர் ஹிட் படங்களை கொடுத்த மைக் மோகன் இணைய இருப்பதாக கூறப்படுகிறது. இன்றைய பூஜையிலும் அவர் கலந்து கொள்வார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இன்று பூஜை நடந்தாலும் பூஜை குறித்த புகைப்படங்கள் லியோ படத்தின் ரிலீஸ்க்கு பின்னர் தான் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஆனால் அதே நேரத்தில் இன்றைய பூஜையில் கலந்து கொள்ளும் நட்சத்திரங்கள் குறித்த தகவல் லீக் ஆகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.   

Comments

Welcome to IndiaGlitz comments! Please keep conversations courteous and relevant to the topic. To ensure productive and respectful discussions, you may see comments from our Community Managers, marked with an "IndiaGlitz Staff" label. For more details, refer to our community guidelines.
settings
Login to post comment
Cancel
Comment