கேர்ள் ப்ரண்ட் உடன் விஜய் பார்த்த திரைப்படம்

தளபதி விஜய் நடித்த ’வாரிசு’ திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா நேற்று நடந்த நிலையில் சுமார் அரை மணி நேரம் விஜய் பேசிய கலகலப்பான பேச்சு ரசிகர்கள் மத்தியில் பெரும் திருப்தியை ஏற்படுத்தியது.

குறிப்பாக அவர் இந்த படத்தில் குஷ்பு ஒரு சிறிய வேடத்தில் நடித்து உள்ளார் என்றும் அவரை பார்த்தவுடன் எனக்கு ‘சின்னத்தம்பி’ படம் தான் ஞாபகம் வந்தது என்று கூறினார்

‘சின்னத்தம்பி’ திரைப்படம் ரிலீஸ் ஆனபோது நான் என் நண்பர்கள் மற்றும் கேர்ள் ப்ரண்ட் உடன் அந்த படத்தை பார்த்தேன் என்று கூறியபோது உடனே தொகுப்பாளினி ’அந்த கேர்ள் ப்ரண்ட் யார் என்று கூறுங்கள் என்று கேட்கப் ’போய் வேலையை பாரும்மா’ என்று விஜய் கூறியது காமெடியாக இருந்தது

அதன் பிறகு அவர் ஒரு சில நொடிகள் பேச முடியாமல் அந்தக் கேள்வியால் திணறி அதன் பிறகு தனது பேச்சை ஆரம்பித்தார் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் சரத்குமாரை அவர் குறிப்பிடும்போது அவர் என்றுமே சரத்குமரன் என்று தெரிவித்தார்.

More News

'வாரிசு' இசை வெளியீட்டு விழா: விஜய் கூறிய குட்டிக்கதை!

தளபதி விஜய் நடித்த 'வாரிசு' திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா நேற்று சென்னையில் பிரமாண்டமாக நடந்த நிலையில் இதில் விஜய் வழக்கம்போல் குட்டிக்கதை கூறினார்

விஜய்சேதுபதி-காத்ரீனா கைப் படத்தின் புதிய அப்டேட்!

மக்கள் செல்வன் விஜய் சேதுபதி மற்றும் பிரபல பாலிவுட் நடிகை காத்ரீனா கைப் ஆகிய இருவரும் இணைந்து நடித்து வரும் திரைப்படம் 'மெர்ரி கிறிஸ்மஸ்'. இந்த படத்தை ஸ்ரீராம் என்பவர் இயக்கி வருகிறார்

கடலில் டைவ் அடித்து சான்றிதழ் வாங்கிய தமிழ் நடிகை.. வைரல் புகைப்படங்கள்!

கடலில் டைவ் அடித்து சான்றிதழ் வாங்கிய தமிழ் நடிகை ஒருவரின் புகைப்படங்கள் இணையதளங்களில் வைரலாக வருகின்றன. 

விஜய்சேதுபதியின் அடுத்த படத்தின் ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிப்பு!

மக்கள் செல்வன் விஜய் சேதுபதி கதாநாயகன், வில்லன், சிறப்பு தோற்றம் என பல்வேறு தோற்றங்களில் நடித்து வருகிறார் என்பதும்,அதேபோல் தமிழ் தெலுங்கு கன்னடம் மலையாளம் ஹிந்தி என பான் இந்திய நடிகராக

'வாரிசு' இசை வெளியிட்டு விழா.. போலீசார் காயமடைந்ததால் பரபரப்பு!

தளபதி விஜய் நடித்து முடித்துள்ள 'வாரிசு' திரைப்படம் வரும் பொங்கல் திருநாளில் வெளியாக இருக்கும் நிலையில் இந்த படத்தின் இசை வெளியீட்டு விழா இன்று சென்னையில் நடைபெற்று வருகிறது.