close
Choose your channels

கேர்ள் ப்ரண்ட் உடன் விஜய் பார்த்த திரைப்படம்

Sunday, December 25, 2022 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

தளபதி விஜய் நடித்த ’வாரிசு’ திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா நேற்று நடந்த நிலையில் சுமார் அரை மணி நேரம் விஜய் பேசிய கலகலப்பான பேச்சு ரசிகர்கள் மத்தியில் பெரும் திருப்தியை ஏற்படுத்தியது.

குறிப்பாக அவர் இந்த படத்தில் குஷ்பு ஒரு சிறிய வேடத்தில் நடித்து உள்ளார் என்றும் அவரை பார்த்தவுடன் எனக்கு ‘சின்னத்தம்பி’ படம் தான் ஞாபகம் வந்தது என்று கூறினார்

‘சின்னத்தம்பி’ திரைப்படம் ரிலீஸ் ஆனபோது நான் என் நண்பர்கள் மற்றும் கேர்ள் ப்ரண்ட் உடன் அந்த படத்தை பார்த்தேன் என்று கூறியபோது உடனே தொகுப்பாளினி ’அந்த கேர்ள் ப்ரண்ட் யார் என்று கூறுங்கள் என்று கேட்கப் ’போய் வேலையை பாரும்மா’ என்று விஜய் கூறியது காமெடியாக இருந்தது

அதன் பிறகு அவர் ஒரு சில நொடிகள் பேச முடியாமல் அந்தக் கேள்வியால் திணறி அதன் பிறகு தனது பேச்சை ஆரம்பித்தார் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் சரத்குமாரை அவர் குறிப்பிடும்போது அவர் என்றுமே சரத்குமரன் என்று தெரிவித்தார்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.