கொரோனா வைரஸ் தடுப்பு நிதி கொடுத்த தளபதி விஜய் கொடுத்த மிகப்பெரிய தொகை!

கொரோனா வைரஸ் தடுப்பு நிதியாக கோலிவுட்டின் பல பிரபல நடிகர்கள் லட்சக்கணக்கிலும் கோடிக்கணக்கிலும் நிதியுதவி செய்த நிலையில் கோலிவுட்டின் மாஸ் நடிகரான தளபதி விஜய்யிடம் இருந்து இதுவரை எந்தவித அறிவிப்பும் வெளிவரவில்லை என்பது அவரது ரசிகர்களுக்கு ஒரு பெரும் அதிருதியாக இருந்தது.

இந்த நிலையில் சற்றுமுன் விஜய் ரூ.1.30 கோடி நிதியுதவி குறித்த அறிவிப்பை வெளியிட்டுள்ளார். இதன்படி பிரதமர் நிவாரண நிதியாக ரூ.25 லட்சமும், தமிழக முதல்வர் நிவாரண நிதியாக ரூ.50 லட்சமும், கேரள முதல்வர் நிவாரண நிதியாக ரூ.10 லட்சமும், பெப்சி அமைப்புக்கு ரூ.25 லட்சமும், கர்நாடகா முதல்வர் நிவாரண நிதியாக ரூ.5 லட்சமும், ஆந்திரமுதல்வர் நிவாரண நிதியாக ரூ.5 லட்சமும், தெலுங்கானா முதல்வர் நிவாரண நிதியாக ரூ.5 லட்சமும், புதுவை முதல்வர் நிவாரண நிதியாக ரூ.5 லட்சம் என மொத்தம் ரூ.1.30 கோடி நிதியுதவி செய்துள்ளார்.

மேலும் தனது ரசிகர் மன்ற நிர்வாகிகளுக்கும் ஒரு குறிப்பிட்ட தொகையை அனுப்பி ஏழை எளிய மக்களுக்கு உதவி செய்யவும் விஜய் அறிவுறுத்தியிருப்பதாகவும் தகவல்கள் வெளிவந்துள்ளது.

More News

கொரோனாவுக்கு தடுப்பு மருந்து கண்டிபிடிப்பதில் முதல்கட்ட வெற்றி: தமிழகம் சாதனை

கொரோனா வைரஸை ஒழிக்க இதுவரை தடுப்பு மருந்து கண்டுபிடிக்கப்படவில்லை என்பதும், இதற்கான தடுப்பு மருந்து கண்டுபிடிக்க உலகம் முழுவதும் மருத்துவர்கள்

காவல்துறைக்கு 3 வேளை உணவு, தங்குவதற்கு 8 ஓட்டல்கள் கொடுத்த பிரபல இயக்குனர்

கொரோனா தடுப்பு பணியில் ஈடுபட்டு வரும் மருத்துவர்கள், நர்ஸ்கள், மருத்துவ ஊழியர்கள், காவல்துறையினர் ஆகியோர்களுக்கு அரசும் தனியார் அமைப்புகளும், திரையுலக பிரபலங்களும்

மருத்துவரை அடக்கம் செய்ய எதிர்ப்பு விவகாரம்: பா.ரஞ்சித் கருத்து

சமீபத்தில் கொரோனா பாதிப்பு அடைந்த நோயாளிகளுக்கு சிகிச்சை செய்த சென்னை மருத்துவர் சைமன் அவர்கள் கொரோனாவால் பாதிக்கப்பட்டு உயிரிழந்தார் என்பதும், அவருடைய உடலை அடக்கம் செய்ய கூட பொதுமக்கள் எதிர்ப்பு

நீண்ட தூக்கத்தில் இருந்து திரும்பிவிட்டேன்: சமந்தா

கொரானோ ஊரடங்கு விடுமுறையில் கோலிவுட் பிரபலங்கள் பலர் தங்களது சமூக வலைத்தளங்களில் ஜாலியான, சீரியஸான வீடியோக்கள், புகைப்படங்களை பதிவு செய்து ரசிகர்களை குஷிப்படுத்தி வருகின்றனர்

ஊருக்குதான் உபதேசமா? ஆளுங்கட்சியினர்களின் அடாவடியை தட்டி கேட்கும் கஸ்தூரி

கொரோனா தடுப்பு நடவடிக்கையாக நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்ட நிலையில் மதுக்கடைகள் அனைத்தும் மூடப்பட்டுள்ளன.