25 வருட சினிமா பயணம்: விஜய்யை சிறப்பிக்கும் 'தளபதி யுகம்' பாடல்

  • IndiaGlitz, [Sunday,November 12 2017]

தளபதி விஜய் திரையுலகில் அறிமுகமாகி 25 வருடங்கள் பூர்த்தி ஆனதை அடுத்து அவரது திரையுலக பயணத்தை சிறப்பிக்கும் வகையில் நேற்று ஒரு பாடல் வெளியாகியுள்ளது. 'தளபதி யுகம்' என்ற தலைப்பில் உருவாகியிருக்கும் இந்த பாடலை கணேஷ் மற்றும் விவேக் ரவிச்சந்திரன் எழுத சூப்பர் சிங்கர் பாடகர் திவாகர் பாடியுள்ளார். குணசேகரன் பாலசுப்பிரமணியம் இசையில் உருவான இந்த பாடலை விஜய் விக்னேஷ் இயக்கியுள்ளார்

'திமில் பிடித்த தமிழர்கள் நாங்கள்,
அடக்க நினைத்தால் துள்ளி வருவது காளைகள் மட்டும் அல்ல
என் தமிழ் இனமும் கூட
நேற்று நாம் சத்தம் தட்டி வாடிவாசல் திறந்தோம்
இன்று ரத்தம் சிந்தியும் நம் மக்களை மீட்டெடுப்போம்
ஆளப்போறான் தமிழன்

என்ற வரிகள் இந்த 'தளபதி யுகம்' பாடலுக்கு முன் வருகிறது.

தளபதிக்கு தலை வணங்கும் தென்பொதிகை வணக்கம்
தளபதியின் பேரை சொல்லி பாட ஆசை இருக்கும்

என்று தொடங்கும் இந்த பாடல் முழுவதும் விஜய்யின் போற்றும் வகையில் உள்ளதால் விஜய் ரசிகர்களிடையே பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.

More News

என் வாழ்க்கையே ஒரு வட்டம் தான். விஷால்

விஷால் நடிப்பில் மிஷ்கின் இயக்கிய 'துப்பறிவாளன்' சமீபத்தில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. இந்த நிலையில் விஷாலின் அடுத்த படமான 'இரும்புத்திரை' திரைப்படம் ரிலீசுக்கு தயாராகி வருகிறது.

ரஜினியுடன் இணைந்து அரசியல் பயணம் சாத்தியமா? கமல் பதில்

கமல்ஹாசன் அரசியல் கட்சி தொடங்க முடிவு செய்து அதற்கான ஆயத்த பணிகளில் உள்ளார். வரும் ஜனவரி முதல் ஒவ்வொரு செய்தியாக வரும் என்று அவர் ஏற்கனவே கூறியுள்ளதால் அவருடைய கட்சி அடுத்த ஆண்டு உதயமாகும்

சிங்கம் குகையில் இல்லாத போது அரசியல் செய்கிறார் கமல்: சரத்குமார்

உலக நாயகன் கமல்ஹாசன் இனிமேலும் அரசியலுக்கு வருவாரா? என்ற கேள்வியை எழுப்ப அவசியமில்லாத வகையில் விறுவிறுப்பாக அரசியல் பணியை படிப்படியாக செய்து வருகிறார்.

அந்தப் பாடலை நான் எழுதவில்லை. இசையமைக்கவில்லை. சிம்பு

மத்திய அரசின் பணமதிப்பிழப்பு நடவடிக்கை குறித்து சிம்பு பாடிய பாடல் சமீபத்தில் இணையதளங்களில் வைரலானது. ’தட்ரோம் தூக்குறோம்’ என்று தொடங்கும்

இன்றிரவு முதல் சென்னையில் மழை வெளுத்து வாங்கும்: தமிழ்நாடு வெதர்மேன்

தமிழ்நாடு வெதர்மேன் தனது சமூக வலைத்தளத்தில் மழை குறித்து பதிவு செய்திருக்கும் முக்கிய தகவல் இதுதான்: