close
Choose your channels

விஜய் டிவி டிஆர்பியில் முதலிடத்தில் இருக்கும் சீரியலில் பிக்பாஸ் தாமரை: குவியும் வாழ்த்துக்கள்!

Friday, December 9, 2022 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

விஜய் டிவியில் டிஆர்பியில் நம்பர் ஒன் இடத்தில் இருக்கும் சீரியலில் பிக்பாஸ் தாமரை நடிக்க உள்ளதாக வெளிவந்திருக்கும் புகைப்படங்களுடன் கூடிய தகவல் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது

பிக்பாஸ் நிகழ்ச்சியில் மேடை நாடகக் கலைஞரான தாமரைச்செல்வி கலந்து கொண்டார் என்பதும் அறிமுகம் இல்லாமல் அந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்ட நிலையில் அவர் இந்த நிகழ்ச்சியில் இருந்து வெளியேறும் போது தமிழகம் முழுவதும் மிகப்பெரிய பிரபலமாக இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. அதன்பிறகு பிக்பாஸ் ஜோடி, பிக்பாஸ் அல்டிமேட் ஆகிய நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டு மக்கள் மத்தியில் இடம் பிடித்தார் என்பது குறிப்பிடத்தக்கது

இந்த நிலையில் பிக்பாஸ் தாமரை ஒரு திரைப்படத்தில் நடித்து வருகிறார் என்பதும் ரோபோ சங்கர் உள்ளிட்ட பலர் நடித்து வரும் இந்த திரைப்படத்தில் தாமரைக்கு முக்கிய கேரக்டர் என்றும் கூறப்படுகிறது

இந்த நிலையில் தற்போது விஜய் டிவியில் டிஆர்பியில் நம்பர் ஒன் இடத்தில் இருக்கும் பாரதிகண்ணம்மா சீரியலில் தாமரை நடிக்கவிருப்பதாக கூறப்படுகிறது. இந்த சீரியலில் நடிக்கும் பாரதி மற்றும் கண்ணம்மாவுடன் தாமரை எடுத்த புகைப்படத்தை தனது சமூக வலைத்தளத்தில் பகிர்ந்து கொள்ள நிலையில் இந்த புகைப்படங்கள் வைரலாகி வருகிறது. தாமரை இந்த சீரியலில் நடிப்பது குறித்த அறிவிப்பு விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.   

Comments

Welcome to IndiaGlitz comments! Please keep conversations courteous and relevant to the topic. To ensure productive and respectful discussions, you may see comments from our Community Managers, marked with an "IndiaGlitz Staff" label. For more details, refer to our community guidelines.
settings
Login to post comment
Cancel
Comment