close
Choose your channels

தாமரைக்கு நன்றி சொன்ன பிரியங்கா, பிரியங்காவிடம் மன்னிப்பு கேட்ட தாமரை!

Sunday, January 9, 2022 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

தாமரைக்கு பிரியங்கா நன்றியும் பிரியங்காவுக்கு தாமரை மன்னிப்பும் கேட்ட காட்சிகள் இன்றைய அடுத்த புரமோவில் உள்ளன.

பிக்பாஸ் நிகழ்ச்சி இன்னும் ஒரு வாரத்தில் முடிவடைய உள்ள நிலையில் தற்போது 6 போட்டியாளர்களை உள்ளனர் என்பதும் அதில் நான்கு போட்டியாளர்கள் இறுதிப்போட்டிக்கு தகுதி பெற்று விட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது

இந்த நிலையில் இன்று கமல்ஹாசன் இந்த வீட்டில் உள்ள ஒருவருக்கு நீங்கள் நன்றி சொல்ல வேண்டும் என்றால் யாருக்கு சொல்வீர்கள் என்றும், மன்னிப்பு கோர வேண்டும் என்றால் யாரிடம் கூறுவீர்கள் என்று கூறுகிறார்.

அப்போது பிரியங்கா எழுந்து நான் தாமரை அக்காவுக்கு நன்றி சொல்வேன் என்றும், இத்தனை நாள் எங்களுக்கு சாப்பாடு கொடுத்த ஜீவன் அவர் தான் என்று கூறினார். இதனை அடுத்து எழுந்த தாமரை, ‘நான் பிரியங்காவிடம் மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன் என்றும், பிரியங்காவை நிறைய நான் திட்டி விட்டேன் என்றும், அதனால் நான் மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன் என்று கூறுகிறார். இருவரும் ஒருவரை ஒருவர் நன்றியும் மன்னிப்பும் கேட்டு தோழிகள் ஆகிவிட்டனர் என்பது குறிப்பிடதக்கது.

இதனையடுத்து நிரூப் எழுந்து வந்து பிரியங்காவிடம், ‘உன்னை மாதிரி ஒரு தோழி கிடைக்க மாட்டார்களா என்று நான் ஏங்கியிருக்கின்றேன், உன்னை மனம்புண்படும்படி பேசியிருந்தால் சாரி’ என்று கூறுகிறார்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.