மன்சூர் அலிகான் பெண்களை இப்படி பார்ப்பது வெட்கக்கேடானது: 'தங்கலான்' நடிகை ஆவேசம்..!

  • IndiaGlitz, [Sunday,November 19 2023]

நடிகை த்ரிஷா குறித்து சர்ச்சைக்குரிய வகையில் மன்சூர் அலிகான் பேசியது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி வரும் நிலையில் அவருக்கு கண்டனங்கள் குவிந்து வருகிறது. அந்த வகையில் தற்போது ‘தங்கலான்’ படத்தில் முக்கிய கேரக்டரில் நடித்து வரும் நடிகை தனது சமூக வலைதளத்தில் மன்சூர் அலிகானுக்கு கண்டனம் தெரிவித்துள்ளார்

விஜய் நடித்த ’லியோ’ திரைப்படத்தில் த்ரிஷா மற்றும் மன்சூர் அலிகான் ஆகிய இருவரும் நடித்திருந்தாலும், இருவரும் இணைந்து நடித்த காட்சிகள் இல்லை. இந்த நிலையில் இதுகுறித்து மன்சூர் அலிகான் சமீபத்தில் செய்தியாளர்களை சந்தித்தபோது சர்ச்சைக்குரிய வகையில் பேசினார். அவரது பேச்சுக்கு த்ரிஷா தனது சமூக வலைதளத்தில் கண்டனம் தெரிவித்தார். மேலும் ‘லியோ’ இயக்குனர் லோகேஷ் கனகராஜும் கண்டனம் தெரிவித்திருந்தார்.

இந்த நிலையில் ‘தங்கலான்’ படத்தில் முக்கிய கேரக்டரில் நடித்து வரும் மாளவிகா மோகனன் தனது சமூக வலைதளத்தில் இதற்கு கண்டனம் தெரிவித்துள்ளார். நடிகர் மன்சூர் அலிகான் பேசியது மிகவும் அருவருப்பாக உள்ளது என்றும் அவர் பெண்களை இப்படி பார்ப்பது மிகவும் வெட்கக்கேடானது என்று தெரிவித்தார்

மேலும் தான் பேசியதன் பின்விளைவுகளை பற்றி கவலைப்படாமல் வெளிப்படையாகவும் குற்ற உணர்வு இன்றியும் அவர் பேசுவதை பார்க்கையில் அவமானமாக உள்ளது’ என்றும் மாளவிகா மோகனன் குறிப்பிட்டுள்ளார்.

More News

நான் என்ன இந்த சலசலப்புகளுக்கு என்ன அஞ்சறவனா? த்ரிஷா விவகாரம் குறித்து மன்சூர் அலிகான்..!

நடிகர் மன்சூர் அலிகான் சமீபத்தில் த்ரிஷா குறித்து சர்ச்சைக்குரிய வகையில் பேசிய நிலையில் அவரது பேச்சுக்கு த்ரிஷா, லோகேஷ் கனகராஜ்  உள்ளிட்ட பலர்  கண்டனம் தெரிவித்துள்ளனர்.

ஒரே நேரத்தில் நான்கு திரைப்படங்கள்.. அட்லியின் மெகா திட்டம்..!

இயக்குனர் அட்லி ஒரே நேரத்தில் நான்கு திரைப்படங்களை தயாரிக்க திட்டமிட்டுள்ளதாக சமீபத்தில் அளித்த பேட்டியில் தெரிவித்துள்ளார்.  

த்ரிஷா குறித்து மன்சூர் அலிகானின் சர்ச்சை கருத்து.. லோகேஷ் கனகராஜின் ரியாக்சன்..!

நடிகர் மன்சூர் அலிகான் சமீபத்தில் பேட்டி அளித்த போது த்ரிஷா குறித்து சர்ச்சைக்குரிய கருத்தை தெரிவித்தார். 'லியோ' படத்தில் இணைந்து நடித்தாலும் இருவரும் இணைந்து நடிக்கும் காட்சிகள் இல்லை

மனித குலத்திற்கே இவரால் அவமானம்: மன்சூர் அலிகானுக்கு த்ரிஷா கண்டனம்..!

நடிகர் மன்சூர் அலிகானால் மனித குலத்துக்கு அவமானம் என்று நடிகை த்ரிஷா தனது சமூக வலைதளத்தில் கண்டனம் தெரிவித்துள்ளார்.

பிரதீப்பிடம் மன்னிப்பு கேட்ட பிக்பாஸ் ஐஷு.. உருக்கமான கடிதம்..!

பிக் பாஸ் நிகழ்ச்சியின் போட்டியாளர்களில் ஒருவராக இருந்த ஐஷு, கடந்த வாரம் எலிமினேஷன் செய்யப்பட்ட நிலையில் தற்போது அவர் தனது சமூக வலைதள பக்கத்தில் உருக்கமான கடிதம் எழுதியுள்ளார்.