'இந்த கதையில எதிரி தான் உன்னை தேடி வருவான்: 'தனி ஒருவன் 2' வீடியோ..!

  • IndiaGlitz, [Monday,August 28 2023]

ஜெயம் ரவி, நயன்தாரா நடிப்பில் மோகன் ராஜா இயக்கத்தில், உருவான ’தனி ஒருவன்’ திரைப்படம் கடந்த 2015 ஆம் ஆண்டு வெளியாகி மிகப்பெரிய வெற்றி பெற்றது என்பதும் இந்த படத்தில் வில்லனாக நடித்த அரவிந்த்சாமி நடிப்புக்கு பாராட்டுக்கள் குவிந்தது என்பதும் தெரிந்ததே.

முதல் பாகத்தில் அரவிந்த்சாமி கேரக்டர் மரணம் அடையும் வகையில் முடிந்த நிலையில் இரண்டாம் பாகம் தற்போது தொடங்க உள்ளது. இது குறித்த வீடியோவை தயாரிப்பு நிறுவனமான ஏஜிஎஸ் நிறுவனம் வெளியிட்டுள்ள நிலையில் இந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரல் ஆகி வருகிறது

மோகன் ராஜா மற்றும் ஜெயம் ரவி தோன்றும் இந்த வீடியோவின் இறுதியில் ’இந்த கதையில் எதிரி தான் உன்னை தேடி வருவான்’ என்று மோகன் ராஜா கூறுவதுடன் முடிவடைகிறது. இந்த வீடியோ படத்தின் எதிர்பார்ப்பை மிகப்பெரிய அளவில் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது

இந்த படத்தில் முதல் பாகத்தில் நடித்த ஜெயம் ரவி, நயன்தாரா நடிக்க இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில் இந்த படத்தின் மற்ற நட்சத்திரங்கள் முக்கியமாக வில்லன் யார் என்பது குறித்த தகவல் இனிமேல் தான் வெளியிடப்படும் என்று தெரிகிறது.

மேலும் முதல் பாகத்தில் ஹிப்ஹாப் தமிழா இசையமைத்த நிலையில் இன்று வெளியாகி இருக்கும் வீடியோவுக்கு சாம் சிஎஸ் இசையமைத்துள்ளதால் அவரே இந்த படத்திற்கும் இசையமைக்க வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது.

More News

ஆஹா.. செம போட்டியா இருக்கும் போல தெரியுதே.. பிக்பாஸ் போட்டியாளர்கள் இந்த 18 பேர்களா?

பிக்பாஸ் நிகழ்ச்சி 6 சீசன்கள் முடிவடைந்த நிலையில் 7வது சீசன் விரைவில் தொடங்க இருப்பதாகவும், இந்த சீசனில் கலந்து கொள்ள இருக்கும் போட்டியாளர்கள் குறித்த தகவல்கள் கசிந்து கொண்டிருப்பதையும்

50 வயது நடிகையுடன் பிரேக் அப்? அஜித் பட தயாரிப்பாளர் மகன் வீடியோ வைரல்..!

அஜித் படத்தின் தயாரிப்பாளர் மகனான 38 வயது நடிகர் 50 வயது நடிகையுடன் டேட்டிங்கில் இருப்பதை உறுதி செய்த வீடியோ இணையத்தில் வைரல் ஆகி வருகிறது

வடிவேலு குடும்பத்தில் ஏற்பட்ட பெரும் சோகம்.. தாயார் மறைந்த சில மாதங்களில் மீண்டும் ஒரு இழப்பு..!

நடிகர் வடிவேலுவின் தாயார் கடந்த சில மாதங்களுக்கு முன்னர் காலமான நிலையில் தற்போது அவரது சகோதரர் காலமானது வடிவேலு குடும்பத்தில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

'களத்தூர் கண்ணம்மா' படத்தின் இணை தயாரிப்பாளர் இவர் தான்: கமல்ஹாசன் இரங்கல்..!

உலகநாயகன் கமல்ஹாசன் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமான 'களத்தூர் கண்ணம்மா' திரைப்படத்தின் இணை தயாரிப்பாளர் காலமானதை அடுத்து அவர் இரங்கல் தெரிவித்துள்ளார்.  

பாபாஜி குகைக்கு மலையேறி செல்லும் ரஜினிகாந்த்.. வைரல் வீடியோ..!

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் சமீபத்தில் இமயமலைக்கு ஆன்மிக பயணம் சென்றார் என்பதும் அது குறித்த புகைப்படங்கள் இணையத்தில் வைரல் ஆகியது என்பது தெரிந்தது.