close
Choose your channels

'இந்த கதையில எதிரி தான் உன்னை தேடி வருவான்: 'தனி ஒருவன் 2' வீடியோ..!

Monday, August 28, 2023 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

ஜெயம் ரவி, நயன்தாரா நடிப்பில் மோகன் ராஜா இயக்கத்தில், உருவான ’தனி ஒருவன்’ திரைப்படம் கடந்த 2015 ஆம் ஆண்டு வெளியாகி மிகப்பெரிய வெற்றி பெற்றது என்பதும் இந்த படத்தில் வில்லனாக நடித்த அரவிந்த்சாமி நடிப்புக்கு பாராட்டுக்கள் குவிந்தது என்பதும் தெரிந்ததே.

முதல் பாகத்தில் அரவிந்த்சாமி கேரக்டர் மரணம் அடையும் வகையில் முடிந்த நிலையில் இரண்டாம் பாகம் தற்போது தொடங்க உள்ளது. இது குறித்த வீடியோவை தயாரிப்பு நிறுவனமான ஏஜிஎஸ் நிறுவனம் வெளியிட்டுள்ள நிலையில் இந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரல் ஆகி வருகிறது

மோகன் ராஜா மற்றும் ஜெயம் ரவி தோன்றும் இந்த வீடியோவின் இறுதியில் ’இந்த கதையில் எதிரி தான் உன்னை தேடி வருவான்’ என்று மோகன் ராஜா கூறுவதுடன் முடிவடைகிறது. இந்த வீடியோ படத்தின் எதிர்பார்ப்பை மிகப்பெரிய அளவில் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது

இந்த படத்தில் முதல் பாகத்தில் நடித்த ஜெயம் ரவி, நயன்தாரா நடிக்க இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில் இந்த படத்தின் மற்ற நட்சத்திரங்கள் முக்கியமாக வில்லன் யார் என்பது குறித்த தகவல் இனிமேல் தான் வெளியிடப்படும் என்று தெரிகிறது.

மேலும் முதல் பாகத்தில் ஹிப்ஹாப் தமிழா இசையமைத்த நிலையில் இன்று வெளியாகி இருக்கும் வீடியோவுக்கு சாம் சிஎஸ் இசையமைத்துள்ளதால் அவரே இந்த படத்திற்கும் இசையமைக்க வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.   

Comments

Welcome to IndiaGlitz comments! Please keep conversations courteous and relevant to the topic. To ensure productive and respectful discussions, you may see comments from our Community Managers, marked with an "IndiaGlitz Staff" label. For more details, refer to our community guidelines.
settings
Login to post comment
Cancel
Comment