வித்யாபாலனுக்கு தந்தையாக நடித்த தமிழ் நடிகர் யார் தெரியுமா?

  • IndiaGlitz, [Sunday,December 19 2021]

பிரபல பாலிவுட் நடிகையும் ’நேர்கொண்ட பார்வை’ என்ற திரைப் படத்தில் அஜித்துக்கு ஜோடியாக நடித்தவருமான வித்யாபாலனுக்கு தந்தையாக தமிழ் நடிகர் ஒருவர் நடித்துள்ள தகவல் தற்போது வெளிவந்துள்ளது

பிரபல பாலிவுட் நடிகை வித்யாபாலன் நடித்து வரும் படங்களில் ஒன்றின் படப்பிடிப்பு சமீப காலமாக நடந்து வருகிறது என்பதும் ஸ்ரீஷா குஹா தகுர்தா என்பவர் இயக்கத்தில் உருவாகியுள்ள இந்த படத்தில் அவருக்கு தந்தையாக தமிழ் நடிகர் தலைவாசல் விஜய் நடித்து வருகிறார் என்பதும் குறிப்பிடத்தக்கது. இந்த படத்தின் படப்பிடிப்பு மும்பை, ஊட்டி உள்பட பல பகுதிகளில் நடைபெற்று வந்தது

இந்த நிலையில் வித்யாபாலனுக்கு தந்தையாக நடித்தது குறித்து தலைவாசல் விஜய் கூறியபோது ;வித்யா பாலனின், ‘தி டர்டி பிக்சர்ஸ், ‘சகுந்தலாதேவி உள்பட பல படங்களில் அவரது நடிப்பை நான் திரையில் பார்த்து வியந்திருக்கிறேன் என்றும் தற்போது அவரது நடிப்பை நேரில் பார்க்கும் சந்தர்ப்பம் தனக்கு கிடைத்ததாகவும் அவருடைய நடிப்பை நேரில் பார்த்து அசந்து விட்டதாகவும் தரும் இந்த படம் தந்தை மற்றும் மக்களிடையே இருக்கும் உறவுகள் குறித்த கதையம்சம் கொண்ட படம் என்றும் அவர் தெரிவித்துள்ளார்

இந்த படத்தின் படப்பிடிப்பு முழுவதும் நான் மிகுந்த மகிழ்ச்சியுடன் கலந்து கொண்டேன் என்றும் அவர் தெரிவித்துள்ளார். இந்த படத்தில் இலியானா ஒரு முக்கிய கேரக்டரில் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

More News

ஒபாமா திரைப்படத்தில் விஜய்சேதுபதி இணைந்தது எப்படி? ரகசியத்தை உடைத்த இயக்குநர்!

இயக்குநர் நானி பாலா இயக்கத்தில் ப்ரித்வி பாண்டிராஜன் நடித்துள்ள திரைப்படம் “ஒபாமா“. மக்கள் செல்வன் விஜய் சேதுபதி

உடல்பருமனாக இருப்பது தவறா? போட்டோ ஷுட்டால் தக்கப் பதிலடி கொடுத்த நடிகை!

உடல்பருமன் குறித்த எதிர்மறை எண்ணங்களை போக்கும் வகையில்

உங்களிடம் மாற்றம் தொடங்கிய நாள் இதுதான்: பிரியங்காவிடம் கமல்ஹாசன்

பிக்பாஸ் நிகழ்ச்சியின் போட்டியாளர்களில் ஒருவரான பிரியங்கா ஆரம்பத்தில் பிக்பாஸையே கலாய்த்து செமையாக விளையாடினார் என்பதும் ஆனால் நாளாக ஆக அவருடைய சுயரூபம் வெளிப்பட்டது

எஸ்.எஸ்.ராஜமெளலி வெளியிடும் 'பிரம்மாஸ்திரம்': ரிலீஸ் தேதி அறிவிப்பு!

இந்திய திரையுலகை திரும்பிப் பார்க்க வைக்கும் வகையில் உருவாக்கப்படும் திரைப்படமான 'பிரம்மாஸ்திரம்' என்ற படத்தை தென்னிந்திய மொழிகளில் பிரபல இயக்குநர் எஸ்எஸ் ராஜமவுலி

அவங்களுக்கு வந்தா ரத்தம், மத்தவங்களுக்கு வந்தா தக்காளி சட்னி: பிரியங்காவை கமலிடம் போட்டு கொடுத்த அக்சரா!

பிக்பாஸ் நிகழ்ச்சியில் கடந்த வாரம் நடைபெற்ற ஒரு டாஸ்க்கில் பிரியங்கா மற்றும் அக்சரா இடையே கடுமையான மோதல் வந்தது அனைவரும் தெரிந்ததே. தமிழில் பேசு என்று ப்ரியங்கா கூறியதற்கு