close
Choose your channels

ஒபாமா திரைப்படத்தில் விஜய்சேதுபதி இணைந்தது எப்படி? ரகசியத்தை உடைத்த இயக்குநர்!

Saturday, December 18, 2021 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

இயக்குநர் நானி பாலா இயக்கத்தில் ப்ரித்வி பாண்டிராஜன் நடித்துள்ள திரைப்படம் “ஒபாமா“. மக்கள் செல்வன் விஜய் சேதுபதி இந்தப் படத்தில் சிறப்பு தோற்றத்தில் நடித்திருக்கிறார். படப்பிடிப்பு துவங்கும்போது விஜய்சேதுபதி இந்தப் படத்தில் நடிப்பதாக இல்லை. ஆனால் இந்த இன்பமான ஆச்சர்யம் எப்படி நடந்தது என்பது பற்றி தற்போது இயக்குநர் நானி பாலா செய்தியாளர்களிடம் தெரிவித்து உள்ளார்.

நடிகர் ப்ரித்வி பாண்டிராஜன் ஹீரோவாக நடித்துள்ள “ஒபாமா“ திரைப்படத்தில் மூத்த நடிகர் ஜனகராஜ், இயக்குநர் கே.எஸ்.ரவிக்குமார், இயக்குநர் விக்ரம், ரமேஷ் கண்ணா, தயாரிப்பாளர் டி.சிவா, கயல் தேவராஜ் போன்ற முக்கியப் பிரபலங்கள் இணைந்து நடித்துள்ளனர். மேலும் இந்தப் படத்தில் மற்றொரு பிரபலம் சிறப்பு தோற்றத்தில் நடிக்க இருந்தாராம். ஆனால் படம் துவங்கியவுடன் அவர் படத்தில் இருந்து விலகிவிட்டதால் இயக்குநர் நானிபாலா என்ன செய்வது என்று தெரியாமல் தவித்திருக்கிறார்.

இதைப் பார்த்த மூத்த நடிகர் ஜனகராஜ், 96 இயக்குநர் மூலம் நடிகர் விஜய்சேதுபதியை தொடர்பு கொண்டு “ஒபாமா“ திரைப்படத்தில் நடிகர் விஜய்சேதுபதி நடிப்பதற்கு ஒப்புதல் வாங்கிக் கொடுத்திருக்கிறார். இந்தச் செய்தியை முதலில் என்னாலே நம்ப முடியவில்லை என்று நானிபாலா தற்போது தெரிவித்து உள்ளார்.

மேலும் எப்படி விஜய்சேதுபதியை அணுகவேண்டும் என்று உங்களுக்குத் தோன்றியது என நடிகர் ஜனகராஜிடம் நானிபாலா கேட்டதாகவும் அதற்கு அவரிடம் பழகியதில் இருந்து அறிந்துகொண்டேன் என்று ஜனகராஜ் கூறியதாகவும் தற்போது தெரிவித்துள்ளார்.

இதையடுத்து “ஒபாமா“ திரைப்படத்தின் படப்பிடிப்பு அனைத்தும் முடிவடைந்துள்ளது. விரைவில் இந்தப் படம் ரிலீசாகும் எனக் கூறிய இயக்குநர் நானிபாலா மூத்த நடிகர் ஜனகராஜ்க்கு நடிகர் விஜய்சேதுபதி செய்யும் மரியாதை செய்திருக்கிறார். மக்கள் செல்வன் என்ற பட்டத்திற்கு ஏற்றவர் அவர் என்று நடிகர் விஜய்சேதுபதியை புகழ்ந்து தள்ளியுள்ளார்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.