தளபதி விஜய்யின் 'மாஸ்டர்' ரிலீஸ் எப்போது? பரபரப்பு தகவல்

தளபதி விஜய் நடித்து முடித்துள்ள ‘மாஸ்டர்’ திரைப்படம் ஏப்ரல் 9ஆம் தேதி வெளியிட திட்டமிடப்பட்டு அதற்கான அனைத்து பணிகளும் முடிக்கப்பட்டு ஏப்ரல் 9ஆம் தேதி ரிலீஸ் செய்ய தயாராக இருந்தது. ஆனால் திடீரென கொரோனா தொற்று காரணமாக நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதனால் ‘மாஸ்டர்’ படத்தின் ரிலீஸ் தேதி தள்ளி வைக்கப்பட்டுள்ளது.தற்போது மே 3ஆம் தேதி வரை ஊரடங்கு உத்தரவு நீட்டிக்கப்பட்டுள்ளதால் அதன் பின்னரே சரியான தேதியில் ‘மாஸ்டர்’ படம் ரிலீஸ் ஆகும் என்று படக்குழுவினர்களிடமிருந்து தகவல்கள் வெளிவந்துள்ளது.

இந்த நிலையில் ‘மாஸ்டர்’ படத்தின் தயாரிப்பாளர் சமீபத்தில் தளபதி விஜய்யை சந்தித்து ‘மாஸ்டர்’ ரிலீஸ் தேதி குறித்து ஆலோசனை செய்ததாகவும் இதனை அடுத்து ‘மாஸ்டர்’ படம், தளபதி விஜய் பிறந்த நாளான ஜூன் 22ஆம் தேதி ரிலீஸ் செய்ய திட்டமிட்டு உள்ளதாகவும் இதற்கு விஜய் ஒப்புக்கொண்டதாக கூறப்படுகிறது. இந்த தகவல் உறுதி செய்யப்பட்டால் தளபதி ரசிகர்களுக்கு வரும் ஜூன் 22-ம் தேதி இரட்டை விருந்தாக தளபதி விஜய்யின் பிறந்த நாளும், ‘மாஸ்டர்’ ரிலீஸும் இருக்கும் என தெரிகிறது.

இருப்பினும் மே 3ஆம் தேதிக்கு பிறகு கொரோனா வைரஸ் தாக்கத்தின் அளவு மற்றும் திரையரங்குகள் திறக்கப்படும் தேதி ஆகியவை முடிவு செய்த பின்னரே ’மாஸ்டர்’ படத்தின் ரிலீஸ் தேதி உறுதி செய்யப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.

More News

முதல்வர் கூட்டத்தில் கலந்து கொண்ட காங்கிரஸ் எம்.எல்.ஏவுக்கு கொரோனா உறுதி

குஜராத் மாநிலத்தில் முதலமைச்சர் நடத்திய கூட்டம் ஒன்றில் கலந்து கொண்ட காங்கிரஸ் கட்சியின் எம்.எல்.ஏ ஒருவருக்கு கொரோனா தொற்று இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது

பிரபல தொலைக்காட்சி நடிகை விவாகரத்து!

பிரபல தொலைக்காட்சி நடிகை ஒருவர் தனது கணவரிடம் இருந்து விவாகரத்து பெற்றுள்ளதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது

கசப்பு மருந்தாக இருந்தாலும் ஊரடங்கை ஏற்று கொள்ளத்தான் வேண்டும்: பிரபல நடிகர்

உலகம் முழுவதும் மிக வேகமாக பரவி வரும் கொரோனா வைரஸ் இந்தியாவிலும் கடந்த சில நாட்களாக மிக வேகமாக பரவி வருகிறது. இதுவரை இந்தியாவில் 10 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர்

பால்கனி அரசாங்கம்: மோடி அரசை விமர்சனம் செய்த கமல்ஹாசன்

கொரோனா வைரஸ் பாதிப்பு தமிழகத்திலும் இந்தியாவிலும் தொடங்கிய நாள் முதலே மத்திய, மாநில அரசுகளை தனது சமூக வலைத்தளத்தில் கடுமையாக விமர்சனம் செய்து வருபவர் கமல்ஹாசன்

மே 3க்கு பிறகு கொரோனா வானத்திற்கா போய்விடும்? ஏழைகளை கவனியுங்கள்: பிரதமருக்கு ஸ்ரீரெட்டி கோரிக்கை

இந்தியாவில் கொரோனா வைரஸ் பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வரும் நிலையில் கடந்த மார்ச் மாதம் 24ஆம் தேதி பிரதமர் மோடி 21 நாட்கள் ஊரடங்கு உத்தரவை பிறப்பித்தார்.