மீனாவுக்கு விருந்து வைத்த பிரபல நடிகை: வைரல் புகைப்படங்கள்

நடிகை மீனாவை பிரபல நடிகை ஒருவர் ரெஸ்டாரண்டுக்கு அழைத்துச் சென்று விருந்து வைத்த புகைப்படங்கள் இணையதளங்களில் வைரலாகி வருகிறது.

சமீபத்தில் மீனாவின் கணவர் வித்யாசாகர் உடல்நலக்குறைவு காரணமாக காலமானதை அடுத்து மீனாவுக்கு ஆறுதல் சொல்ல அவருடைய திரையுலக தோழிகள் குவிந்தனர் என்பதும் குறிப்பாக கலா மாஸ்டர், சங்கவி, சங்கீதா, ரம்பா, சினேகா உள்ளிட்ட பலரும் நேரில் ஆறுதல் கூறியதோடு அவரது மகளுக்கும் ஆறுதல் கூறினர் என்பதையும் பார்த்தோம்.

இந்த நிலையில் சமீபத்தில் மீனா தனது பிறந்தநாளை கொண்டாடிய போது கணவர் இழப்பில் இருந்து அவர் மீண்டும் வரவேண்டும் என்பதற்காக இந்த பிறந்த நாளை அவரது திரையுலக தோழிகள் சிறப்பாக கொண்டாட ஏற்பாடு செய்து இருந்தனர். இதுகுறித்த வீடியோ, புகைப்படங்கள் சமீபத்தில் வைரலானது. தோழிகள் எடுத்த முயற்சியால் மீனா இந்த பிறந்தநாள் விழாவில் உற்சாகத்துடன் கலந்து கொண்டார்.

இந்த நிலையில் மீனா பிறந்தநாளை அடுத்து பிரபல நடிகை ராதிகா ரெஸ்டாரண்டுக்கு அவரை அழைத்துச் சென்று விருந்து கொடுத்துள்ளார். இந்த விருந்து குறித்த புகைப்படங்களை மீனா தனது இன்ஸ்டாகிராம் பதிவு செய்து கூறியிருப்பதாவது: எப்போதும் எனக்காக சிறந்ததை நினைக்கும் அழகான நண்பர்களை கொண்டிருப்பதற்கும் என்னை மகிழ்ச்சியாக பார்க்க தங்களால் முடிந்ததை செய்த எனது நண்பர்களுக்கும் நன்றி என பதிவு செய்துள்ளார்.

More News

இப்படி ஒரு பிறந்த நாளை நான் பார்த்ததே இல்லை. விக்னேஷ் சிவனை அசர வைத்த நயன்தாரா!

இயக்குனர் விக்னேஷ் சிவன் இன்று தனது பிறந்த நாளை கொண்டாடி வரும் நிலையில், இன்றைய பிறந்த நாளில் விக்னேஷ் சிவனை அவருடைய மனைவி நயன்தாரா அசரவைத்த புகைப்படங்கள்

ரியல் ஸ்டார் உபேந்திராவின் பிறந்த நாள் பரிசு: 'கப்ஜா' பட டீசர் வெளியீடு!

கன்னட திரையுலகின் முன்னணி நட்சத்திர நடிகர்களான உபேந்திரா மற்றும் கிச்சா சுதீப் கதையின் நாயகர்களாக நடித்திருக்கும் 'கப்ஜா' படத்தின் டீசர் வெளியாகி இருக்கிறது.

வினய் ராய் நடிப்பில் உருவாகும் கிரைம் திரில்லர் படம்: டைட்டில் அறிவிப்பு!

நடிகர் வினய் ராய் முதன்மையான கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் புதிய க்ரைம் திரில்லர் திரைப்படத்திற்கு 'மர்டர் லைவ்' என பெயரிடப்பட்டு, அதன் ஃபர்ஸ்ட் லுக் வெளியிடப்பட்டிருக்கிறது.

மீண்டும் ரீஎண்ட்ரி ஆகும் மக்கள் நாயகன் ராமராஜன்.. அசத்தலான டைட்டில் அறிவிப்பு!

கடந்த 80 மற்றும் 90களில் பல வெற்றி படங்களில் நடித்த மக்கள் நாயகன் ராமராஜன் நீண்ட இடைவெளிக்கு பின்னர் மீண்டும் திரையுலகிற்கு ரீ-என்ட்ரி ஆகிறார். அவர் நடிக்கயிருக்கும் திரைப்படத்தின் டைட்டில்

சரக்கடித்து பார்ட்டியில் செம டான்ஸ் ஆடும் ராஷ்மிகா மந்தனா: வீடியோ வைரல்

நடிகை ராஷ்மிகா சரக்கு அடித்துவிட்டு பார்ட்டியில் கவர்ச்சி உடையுடன் செம டான்ஸ் ஆடும் வீடியோ இணையதளங்களில் வைரலாகி வருகிறது.